ஊரடங்கால் தவிக்கும் மக்கள்… இலவசமாக உணவு வழங்கும் நயினார் நாகேந்திரன்!

 

ஊரடங்கால் தவிக்கும் மக்கள்… இலவசமாக உணவு வழங்கும் நயினார் நாகேந்திரன்!

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட முதல் ஒரு சில நாட்கள், முழுமையாக அதனை கடைபிடித்த மக்கள் அடுத்தடுத்த நாட்களில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றித் திரிய ஆரம்பித்தனர். இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கி அரசு உத்தரவு பிறப்பித்தது.

ஊரடங்கால் தவிக்கும் மக்கள்… இலவசமாக உணவு வழங்கும் நயினார் நாகேந்திரன்!

இதனால், வெளியூர்களில் இருந்து தமிழகம் வந்து பணிபுரிந்த நபர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். உணவுக்கு அவர்கள் திண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு சமூக ஆர்வலர்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உணவு வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், நெல்லை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வட மாநிலத்தவர்கள் சிலர் உணவு இல்லாமல் தவித்துக் கொண்டிருந்துள்ளனர்.

இதை அறிந்த பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் நெல்லை மாநகராட்சி சார்பில் இயங்கி வரும் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார். அதற்கான செலவை தானே செலுத்துவதாகவும் மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். அதன் படி நெல்லை டவுன், தச்சநல்லூர், பேட்டை உள்ளிட்ட 5 இடங்களில் உள்ள அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.