வருத்தத்தை போக்குவதாக இருந்தால் பொதுச் செயலாளர் பதவி கொடுத்திருக்க வேண்டும்! – நயினார் நாகேந்திரன் அதிருப்தி

 

வருத்தத்தை போக்குவதாக இருந்தால் பொதுச் செயலாளர் பதவி கொடுத்திருக்க வேண்டும்! – நயினார் நாகேந்திரன் அதிருப்தி


தென் மண்டல பொறுப்பாளர் பதவி என்பது அதிருப்தி காரணமாக கொடுத்தது இல்லை, அதிருப்தியை போக்குவதாக இருந்தால் பொதுச் செயலாளர் பதவி கொடுத்திருக்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கூறியிருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க-வில் இருந்து பா.ஜ.க-வில் இணைந்த நயினார் நாகேந்திரன், மாநிலத் தலைவர் ஆகும் ஆசையில் இருந்தார். கடைசியில் முருகன் நியமிக்கப்படவே அதிர்ச்சி அடைந்தார். குறைந்தது, தனக்கு பொதுச் செயலாளர் பதவியாவது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால், டம்மி போஸ்டான துணைத் தலைவர் பதவியே அவருக்கு வழங்கப்பட்டது. இதனால், அவர் அதிருப்தியில் இருப்பதாக செய்தி வெளியானது. அதை அவரே உறுதியும் செய்தார்.
இதைத் தொடர்ந்து அவர் அ.தி.மு.க பக்கம் மீண்டும் தாவுவார் என்று கூறப்பட்டது. இதற்கான பேச்சு வார்த்தைகளும் நடந்தன. கட்சி மேலிடத்தில் பேசி நல்ல பதவி வாங்கித் தருவதாக மாநில தலைவர் முருகன் உறுதி செய்தார். கட்சியின் பொதுச் செயலாளர் பதவி இல்லாமல் வேறு பதவிகள் கொடுப்பதால் அதிருப்தி மறைந்துவிடாது என்று அவர் கூறிவந்தார்.

வருத்தத்தை போக்குவதாக இருந்தால் பொதுச் செயலாளர் பதவி கொடுத்திருக்க வேண்டும்! – நயினார் நாகேந்திரன் அதிருப்தி


இந்த நிலையில் நயினார் நாகேந்திரனுக்கு புதிதாக தென்மண்டல பொறுப்பாளர் என்ற பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புதிய பொறுப்பு கிடைத்த பிறகு நெல்லை வந்த அவருக்கு பா.ஜ.க நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது, “வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் அதிக உறுப்பினர்கள் வெற்றி பெற்று கோட்டைக்கு வருவார்கள்.

வருத்தத்தை போக்குவதாக இருந்தால் பொதுச் செயலாளர் பதவி கொடுத்திருக்க வேண்டும்! – நயினார் நாகேந்திரன் அதிருப்தி

தேர்தல் பற்றி இன்னும் யோசிக்கவில்லை. தேதி அறிவிக்கப்பட்ட பிறகுதான் கூட்டணியில் யார் யார் இருப்பார்கள் என்பது தெரியவரும். அதிருப்தியைப் போக்க இந்த பதவி எனக்கு வழங்கப்படவில்லை. அப்படி அதிருப்தியைப் போக்க பதவி கொடுக்க வேண்டும் என்றால் பொதுச் செயலாளர் பதவி கொடுத்திருக்க வேண்டும். தற்போது மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளதால் இந்த பதவியைக் கொடுத்துள்ளார்கள். வருத்தம் வருத்தம்தான்” என்றார்.
நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சு பா.ஜ.க தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.