நாகர்கோவில் டூ நெல்லை: கண்டக்டர் இல்லாத பேருந்துகள் இயக்கம்!

 

நாகர்கோவில் டூ நெல்லை: கண்டக்டர் இல்லாத பேருந்துகள் இயக்கம்!

நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு பேருந்துகளில் செல்ல கிட்டத்தட்ட 1.45 மணி நேரத்திற்கு மேல் ஆகும். அதனால், வழியில் எங்கும் நிற்காத வண்ணம் என்ட் டூ என்ட் பேருந்துகளை இயக்க வேண்டும் என மக்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதனை ஏற்ற போக்குவரத்து துறை, நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கும் கண்டக்டர்கள் இல்லாத என்ட் டூ என்ட் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்தது. இதில் 1.20 மணி நேரத்தில் நெல்லைக்கு சென்றுவிட முடியுமாம்.

நாகர்கோவில் டூ நெல்லை: கண்டக்டர் இல்லாத பேருந்துகள் இயக்கம்!

பயணிகள் நாகையிலோ அல்லது நாகர்கோவிலிலோ ஏறும் போது அங்கேயே அவர்களுக்கு பயணச் சீட்டு வழங்கப்படும். வழியில் பேருந்துகள் எங்கும் நிற்காது என்பதால் கண்டக்டருக்கு வேலையில்லை. இந்த நடைமுறையை பின்பற்றி தினமும் 20 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்ததாம். கொரோனா தளர்வுகளுக்கு பிறகு இந்த பேருந்து சேவை குறைந்ததையடுத்து, தற்போது மீண்டும் இதை அமல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதன் படி, இன்று முதல் நாகை அல்லது நாகர்கோவிலில் டிக்கெட் வழங்கி, கண்டக்டர்கள் இல்லாத என்ட் டூ என்ட் பேருந்துகள் மீண்டும் தொடங்கியிருக்கிறது. இது பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.