நாகர்கோவில் பக்கம் கலக்கும் நாஞ்சில் நாட்டு “ரசவடை”

 

நாகர்கோவில் பக்கம் கலக்கும் நாஞ்சில் நாட்டு “ரசவடை”

உளுந்தவடை, பருப்பு வடை சாப்பிடுவதில் தமிழர்கள் பெயர் போனவர்கள். மதுரை, திருநெல்வேலி பக்கம் போனால் அதிகம் பேர் தயிர் வடை சாப்பிடுவார்கள்.இதுவே கன்னியாகுமரி மற்றும் நாகர் கோவில் பக்கம் சென்றால் எந்த ஓட்டலுக்குக் போனாலும் உங்களை ‘ரச வடை’ இன்முகத்துடன் அழைக்கும்.ஓட்டலுக்கு வரும் உள்ளூர்காரர்களில் பெரும்பாலான பேர் முதலில் இந்த ரசவடையை வாங்கிச் சாப்பிட்டு விட்டு, பின்னர்தான் இட்லியோ தோசையோ ‘ஆர்டர்’ செய்வார்கள்.

நாகர்கோவில் பக்கம் கலக்கும் நாஞ்சில் நாட்டு “ரசவடை”


நாஞ்சில் நாட்டு ரச வடையை நமது வீட்டிலும் கூட மிக எளிதாகச் செய்து விடலாம். அடுத்து வடை தயாரிக்க, பட்டாணி பருப்பையே பயன்படுத்த வேண்டும். பட்டாணி பருப்பை மாவாக அறைத்துக் கொள்ள வேண்டும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய், சிறிதளவு சோம்பு, கறிவேப்பிலை, உப்பு சேர்த்து பிசைந்து வடை போல் தட்டி எண்ணெயில் பொரித்தெடுத்தால் வடை தயார்.

நாகர்கோவில் பக்கம் கலக்கும் நாஞ்சில் நாட்டு “ரசவடை”


மிளகாய் வற்றல், வெள்ளைப்பூண்டு, கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை சிறிது மசித்து புளித் தண்ணீரில் போட்டு கொதிப்பதற்கு முன் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால், ரசம் தயார். இந்த ரசத்தில் மிளகு, தக்காளி சேர்ப்பதில்லை.உப்பு குறைவாகவே சேர்க்க வேண்டும்.இந்த ரச வடை என்பது வாய்க்கு ருசியானது மட்டுமல்ல.. வயிற்றுக்கும் நல்லது.