நாகர்கோவில் சந்தையில் 40 வியாபாரிகளுக்கு கொரோனா! – பீதியில் கன்னியாகுமரி மக்கள்

 

நாகர்கோவில் சந்தையில் 40 வியாபாரிகளுக்கு கொரோனா! – பீதியில் கன்னியாகுமரி மக்கள்

சென்னையில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பிறகு மற்ற மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி கொரோனா மிகவும் கட்டுக்குள் இருந்த கோவை உள்ளிட்ட நகரங்களிலும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூட முன்பு இருந்த ஒத்துழைப்பு இப்போது இல்லை என்று பேட்டி அளித்திருந்தார்.

நாகர்கோவில் சந்தையில் 40 வியாபாரிகளுக்கு கொரோனா! – பீதியில் கன்னியாகுமரி மக்கள்தென் மாவட்டங்களில் மதுரை, விருதுநகர், நெல்லையைப் போல கன்னியாகுமரியிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நாகர்கோவில் வடசேரி சந்தையில் இன்று ஒரே நாளில் 40 வியாபாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சந்தை மூடப்பட்டுள்ளது. ஏற்கனவே நாகர்கோவில் வடசேரி காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் மற்றும் ஊர்காவல் படையைச் சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா உறுதியானதால் காவல் நிலையமும் மூடப்பட்டது.

நாகர்கோவில் சந்தையில் 40 வியாபாரிகளுக்கு கொரோனா! – பீதியில் கன்னியாகுமரி மக்கள்மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து வடசேரி சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கிச் செல்பவர்கள் அதிகம். வடசேரி வியாபாரிகள் மூலம் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால், கொரோனா பரவலைத் தடுக்க ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டுக் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.