அதிமுகவில் இருந்து நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் நீக்கம்- ஓபிஎஸ், ஈபிஎஸ்

 

அதிமுகவில் இருந்து நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் நீக்கம்- ஓபிஎஸ், ஈபிஎஸ்

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை மறுக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
மருத்துவ படிப்புகளில் மத்திய அரசு ஒதுக்கீட்டில் முற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது நிறுத்தப்பட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு, தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து குழு அமைத்து ஆய்வு செய்து, 3 மாதங்களில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுகவில் இருந்து நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் நீக்கம்- ஓபிஎஸ், ஈபிஎஸ்

இந்நிலையில் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவில் இருந்து நாகர்கோவில் தொகுதி முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதால் நாஞ்சில் முருகேசன் நீக்கம். இடஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அதிமுகவின் கொள்கைக்கு கிடைத்த பரிசு. சமூக நீதியை நிலைநாட்டி அனைத்து தரப்பு மக்களின் வாழ்வில் முன்னேற்றம் கண்டிட உழைப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.