#Nagapattinam ‘மோடி வரவே வேணாம்’.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நாகப்பட்டினம் மக்கள்!

#Nagapattinam ‘மோடி வரவே வேணாம்’.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நாகப்பட்டினம் மக்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக, பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. திமுக விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கைகோர்த்து மெகா கூட்டணியை அமைத்திருக்கிறது. அதே போல மக்கள் நீதி மய்யம் சமக மற்றும் ஐஜேகே உடனும் அமமுக தேமுதிக உடனும் கூட்டணி அமைத்திருக்கின்றன.

#Nagapattinam ‘மோடி வரவே வேணாம்’.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நாகப்பட்டினம் மக்கள்!

கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தை ஆண்டது திமுக, அதிமுக ஆகிய இரண்டே கட்சிகள் தான். இந்த இரு துருவத்தை தவிர வேறு ஏதேனும் அரசியல் கட்சி தமிழகத்தில் ஆள வாய்ப்பு இருக்கிறதா? தேர்தலில் மக்கள் ஆதரவு யாருக்கு? உள்ளிட்ட பல கேள்விகளுடன் நமது டாப் தமிழ் நியூஸ் சேனல் 234 தொகுதிகளிலும் மக்கள் மத்தியில் கருத்து கேட்பு நடத்தி வருகிறோம். அந்த வகையில் இன்று நாம் பார்க்கப்போகும் தொகுதி நாகப்பட்டினம்.

#Nagapattinam ‘மோடி வரவே வேணாம்’.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நாகப்பட்டினம் மக்கள்!

திமுக, அதிமுக தான்..

கடந்த 1991ம் ஆண்டு தேர்தலில் அதிமுகவில் இருந்து கோடிமாரியும், 1996ம் ஆண்டு திமுகவில் இருந்து நிஜாமுதீன் வெற்றி பெற்றார். 2001ம் ஆண்டு அதிமுகவில் இருந்து ஜீவானந்தமும், 2006ம் ஆண்டு மார்க்ஸ்சிட் கட்சியில் இருந்து மாரிமுத்துவும், 2011ம் ஆண்டு அதிமுகவில் இருந்து ஜெயபாலும், 2016ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியும் இந்த தொகுதியில் வெற்றி வாகையை சூடினார்கள். இவ்வாறு கடந்த 30 ஆண்டுகளில் பெரும்பாலும் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளே இந்த தொகுதியை ஆண்டு கொண்டிருக்கின்றன.

#Nagapattinam ‘மோடி வரவே வேணாம்’.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நாகப்பட்டினம் மக்கள்!

களம் காணும் வேட்பாளர்கள்:

நாகப்பட்டினம் தொகுதி திமுக கூட்டணி கட்சியான விசிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. விசிக சார்பில் இங்கு ஆளூர் ஷா நவாஸ் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் தங்க கதிரவன் போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம், அமமுக ஆகியவற்றின் கூட்டணி கட்சிகளும் இந்த தொகுதியில் களம் காணுகின்றன.

#Nagapattinam ‘மோடி வரவே வேணாம்’.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நாகப்பட்டினம் மக்கள்!

ஆளப்போவது யார்?

இதுவரையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளே பெரும்பாலும் நாகப்பட்டினத்தில் ஆட்சி புரிந்திருக்கும் நிலையில், இந்த முறை அந்த தொகுதி மக்கள் யாருக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என நமது செய்தியாளர் மக்கள் மத்தியில் கேள்வி எழுப்பினார். அதற்கு பெரும்பாலானோர் சொன்ன பதில்கள் திமுக மற்றும் அதிமுக தான். ஒரு சிலர் நாம் தமிழர் கட்சி சீமான் பெயரையும் சொன்னார்கள். குறிப்பாக இந்த தொகுதியில் மோடிக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

திமுக, அதிமுக தவிர எந்த கட்சி வரும் என்ற கேள்விக்கு பலர் மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் சொன்னார்கள். இதையடுத்து நமது செய்தியாளர் தற்போதைய ஆட்சிக்கு எவ்வளவு ரேட்டிங் கொடுப்பீர்கள் என்று கேட்க, பெரும்பாலானோர் பூச்சியம் என்று தான் சொன்னார்கள்.

#Nagapattinam ‘மோடி வரவே வேணாம்’.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நாகப்பட்டினம் மக்கள்!

சிறுபான்மையினர் அதிகமாக இருக்கும் இந்த நாகப்பட்டினம் தொகுதி தற்போது அதிமுக வசம் இருக்கிறது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதால் தற்போது வாக்குகள் திமுக பக்கம் சிதறுகின்றன. சர்வேயின் முடிவில் மக்களின் பெருவாரியான சப்போர்ட் திமுகவுக்கு தான் இருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது. இந்த கணிப்பு தேர்தலில் பிரதிபலிக்கிறதா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.