நாகப்பட்டினம்- 6 மாதத்துக்கு பின் பள்ளிகள் திறப்பு – ஆர்வமுடன் வந்த மாணவர்கள்!

நாகப்பட்டினம்- 6 மாதத்துக்கு பின் பள்ளிகள் திறப்பு – ஆர்வமுடன் வந்த மாணவர்கள்!

நாகப்பட்டினம்

காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்ததை அடுத்து, 6 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வருகை தந்தனர்.

நாகப்பட்டினம்- 6 மாதத்துக்கு பின் பள்ளிகள் திறப்பு – ஆர்வமுடன் வந்த மாணவர்கள்!

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன.

நாகப்பட்டினம்- 6 மாதத்துக்கு பின் பள்ளிகள் திறப்பு – ஆர்வமுடன் வந்த மாணவர்கள்!

இதையடுத்து இன்று பெற்றோர்களின் அனுமதி கடிதத்துடன் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கூடங்களுக்கு வருகை தந்தனர்.

நாகப்பட்டினம்- 6 மாதத்துக்கு பின் பள்ளிகள் திறப்பு – ஆர்வமுடன் வந்த மாணவர்கள்!

பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு ஒரு வகுப்பறையில் 20 மாணவ மாணவிகள் அமர வைக்கப்பட்டனர். வகுப்புகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே நடத்தப்படும். காரைக்காலில் 30 அரசு பள்ளிகள், 46 தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

9 மற்றும் 11ஆம் வகுப்புகள் திங்கட்கிழமை முதல் தொடங்க உள்ளதாக காரைக்கால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.