நடவுபணியில் ஈடுபட்டவர்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ் கட்சியினர்

நடவுபணியில் ஈடுபட்டவர்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ் கட்சியினர்

நாகை

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, நாகையில் நடவுபணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம் காங்கிரஸ் கட்சியினர் வயலில் இறங்கி கையெழுத்து பெற்றனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் நாடுமுழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளிடம் கையெழுத்து பெறும்

நடவுபணியில் ஈடுபட்டவர்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ் கட்சியினர்

நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் கையெழுத்து இயக்கத்தை துவங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, நாகை, பாலையூர், கீழ்வேளூர், திருமருகல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடவுபணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம், வயலில் இறங்கி, காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து பெற்றனர்.

நடவுபணியில் ஈடுபட்டவர்களிடம் கையெழுத்து பெற்ற காங்கிரஸ் கட்சியினர்

அப்போது, வேளாண் சட்டத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம், மாவட்ட பொதுச்செயலாளர் நாகூர் நௌஷாத், காங்கிரஸ் விசாயிகள் பிரிவு செயலாளர் நிக்கோலஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.