நாகை- ஏரியில் அனுமதியின்றி சவுடுமண் அள்ளிய பொக்லைன்கள் சிறைபிடிப்பு

நாகை- ஏரியில் அனுமதியின்றி சவுடுமண் அள்ளிய பொக்லைன்கள் சிறைபிடிப்பு

நாகை

வேளாங்கண்ணி அருகே ஏரியில் அனுமதியின்றி சவுடுமண் அள்ளிய பொக்லைன் இயந்திரங்களை கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம் சிந்தாமணி கிராமத்தில் 50

நாகை- ஏரியில் அனுமதியின்றி சவுடுமண் அள்ளிய பொக்லைன்கள் சிறைபிடிப்பு

ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள திடல் ஏரி மூலம் சுற்றுவட்டார கிராமங்களில் 750 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், ஏரிக்கு திடீரென 2 பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரிகளுடன் வந்த சிலர் அங்கிருந்த மண்களை

நாகை- ஏரியில் அனுமதியின்றி சவுடுமண் அள்ளிய பொக்லைன்கள் சிறைபிடிப்பு

திருட்டுத்தனமாக எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து அங்கு கூடிய கிராம மக்கள், இதுகுறித்து அவர்களிடம் கேட்டுள்ளனர். அவர்கள் முறையாக பதில் அளிக்காததால் சந்தேகமடைந்த கிராம மக்கள், பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்தனர். கிராம மக்கள் புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணித்துறை கோட்ட பொறியாளர் பாண்டியன்

நாகை- ஏரியில் அனுமதியின்றி சவுடுமண் அள்ளிய பொக்லைன்கள் சிறைபிடிப்பு

நேரடியாக ஆய்வுசெய்து மண் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது, கீழையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனிடையே திடல் ஏரியில் அனுமதியின்றி சவுடு மண் கொள்ளையில் ஈடுபட்டு வருவதால், கால்நடைகள் மற்றும் குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டள்ளதாக குற்றம் சாட்டும் அப்பகுதி மக்கள், மண் கொள்ளையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.