30 ஆயிரம் நாய்கள் நாகாலாந்துக்கு கடத்தும் கொடூரம்.. நாய் கறிக்கு தடை விதித்த அரசு!

ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய்கள் நாகாலாந்துக்கு இறைச்சிக்காக கடத்தப்படும் நிலையில் அங்கு நாய்க்கறி விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

நாகாலாந்து பழங்குடியின மக்கள் ஆடு, மாடு இறைச்சியைப் போல நாய்க்கறியையும் விரும்பி சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மாநிலங்களிலிருந்து நாகாலாந்துக்கு 30 ஆயிரத்துக்கும் அதிகமான நாய்கள் கடத்தப்பட்டு இறைச்சிக்காக கொலை செய்யப்படுவதாக விலங்கு ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வந்தனர். எனவே, நாய்க் கறி விற்கவும் உண்ணவும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

இதைத் தொடர்ந்து நாகாலாந்து அரசு நாய்கறி விற்பனை செய்ய, நாய் கறியால் யார் தயாரிக்கப்பட்ட உணவுகளை விற்பனை செய்ய தடை விதிப்பது என்று முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அம்மாநிலத் தலைமைச் செயலாளர் டெம்ஜென் டாய் வெளியிட்ட ட்வீட் பதிவில் தெரிவித்திருந்தார்.

http://


நாகாலாந்து மக்களின் உணவு விஷயத்தில் அரசு முடிவு செய்வது தவறு என்று சிலர் நாகா மக்களுக்கு ஆதரவாக குரல்களும் எழுந்துள்ளன. இருப்பினும் அரசின் முடிவை எப்படி செயல்படுத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிசோரம் மாநிலத்தில் நாய் இறைச்சிக்குத் தடை விதிக்கப்பட்டது. உணவுக்காக கொல்லப்படும் விலங்குகள் பட்டியலிலிருந்து நாயை அது நீக்கியது. அதைத் தொடர்ந்து நாகாலாந்து அரசும் இந்த முடிவை எடுத்துள்ளது.

Most Popular

ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து!

அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ள ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நாளை நடைபெற உள்ளது. அந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். இதையொட்டி...

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா உறுதி!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 86 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அதில் அதிகமாக தமிழகமும், மகாராஷ்டிராவுமே அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியாக உள்ளது. தமிழகத்தில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து...

வாழ்த்து சொல்வதற்காகவா டெல்லி சென்றார் கு.க.செல்வம்?

தலைமை மீதிருந்த அதிருப்தியினால் திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் டெல்லி்யில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்ததாக தகவல் வெளியான நிலையில், தான் பாஜகவில் இணையவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார் செல்வம். பின்னர் எதற்காக...

சென்னையில் ஒரு லட்சத்து 4,027 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,063 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர்...