நாகை, கடலூரில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

 

நாகை, கடலூரில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதால் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க உள்ளது. இதனால், மழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களை மீட்டு வேறு இடத்தில் தங்க வைக்க முகாம்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிகிறது. இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது.

நாகை, கடலூரில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

இந்த நிலையில், வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் நாகை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.