லாக்டவுனில் பா.ஜ.க. தொண்டர்கள் 22 கோடி உணவு பொட்டலங்கள், 5 கோடி மோடி ரேஷன் கிட்ஸ் வழங்கினர்.. நட்டா தகவல்

லாக்டவுனில் பா.ஜ.க. தொண்டர்கள் 22 கோடி உணவு பொட்டலங்கள், 5 கோடி மோடி ரேஷன் கிட்ஸ் வழங்கினர்.. நட்டா தகவல்

டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அந்த கட்சியின் சேவை என்பது அமைப்பு என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசுகையில் கூறியதாவது: லாக்டவுன் காலத்தில் 8 லட்சத்துக்கும் அதிகமான பா.ஜ.க. தொண்டர்கள் 22 கோடிக்கும் அதிகமான உணவு பாக்கெட்டுகள், 5 கோடிக்கும் அதிகமான ரேஷன் கிட்ஸ் மற்றும் 5 கோடிக்கும் அதிகமான மாஸ்க்களை பொதுமக்களுக்கு வழங்கி உள்ளனர்.

லாக்டவுனில் பா.ஜ.க. தொண்டர்கள் 22 கோடி உணவு பொட்டலங்கள், 5 கோடி மோடி ரேஷன் கிட்ஸ் வழங்கினர்.. நட்டா தகவல்

பி.எம். கேர்ஸ் நிதியத்துக்கு நிதி அளிக்க 58 லட்சத்துக்கும் அதிகமான மக்களை பா.ஜ.க. தொண்டர்கள் ஊக்குவித்துள்ளனர். மேலும் லாக்டவுன் காலத்தில் பா.ஜ.க. சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான வீடியோ கான்பரன்சிங் வாயிலாக 2.5 லட்சம் தொண்டர்களுடன் தொடர்பு கொண்டது. 700 ஆடியோ பாலங்களும் நாம் மேற்கொண்டோம். இந்த செயல்கள் நாம் செய்த பல முயற்சிகளில் நம் தொண்டர்களை உயர்த்தின. பல மாநிலங்களில் பேயிங் கெஸ்டாக இருந்த வடகிழக்கு குழந்தைகளுக்கு வாடகை செலுத்துவதில் நெருக்கடி ஏற்பட்டது. பா.ஜ.க. தொண்டர்கள் அவர்களுக்கு பணம் மற்றும் தங்குமிடம் வழங்கினர்.

லாக்டவுனில் பா.ஜ.க. தொண்டர்கள் 22 கோடி உணவு பொட்டலங்கள், 5 கோடி மோடி ரேஷன் கிட்ஸ் வழங்கினர்.. நட்டா தகவல்

பிரதமர் மோடியின் நடவடிக்கைகளை உலகம் நெருக்கமாக பின்பற்றி வருகிறது. தொற்று நோய்க்கான போராட்டத்தை மட்டும் வலுப்படுத்தவில்லை, அவரால் கட்சிக்கும் உத்வேகம் கிடைத்துள்ளது மேலும் அவரால் கட்சிக்கு உத்வேகம் அளித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் உள்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். பிரதமர் நரேந்திர மோடியும் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.