கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்குவதை அதிகரிக்க ஏற்பாடு! நபார்டு வங்கித்தலைவருடன் முதல்வர் ஆலோசனை!!

 

கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்குவதை அதிகரிக்க ஏற்பாடு! நபார்டு வங்கித்தலைவருடன் முதல்வர் ஆலோசனை!!

ஊரக உள்கட்டமைப்பு மேம்பாடு, கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்குவதை அதிகரிப்பது பற்றி நபார்டு வங்கித்தலைவருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

விவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், சிறு விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், பிரதமர் நரேந்திர மோடி ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிதியுதவி அளிக்கும் திட்டத்தை சமீபத்தில் துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், நபார்டு வங்கியும், தேசிய வங்கிகளும், தமிழகத்தில் விவசாய குழுக்கள், கூட்டுறவு வங்கிகளுக்கு கடன் வழங்க உள்ளது.

கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்குவதை அதிகரிக்க ஏற்பாடு! நபார்டு வங்கித்தலைவருடன் முதல்வர் ஆலோசனை!!

இந்நிலையில், தமிழகம் வந்துள்ள நபார்டு வங்கி தலைவர் சிந்தாலா பல்வேறு மாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதனிடையே, பல்வேறு திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.

சந்திப்பின்போது. தமிழகத்தில் ஊரக உள்கட்டமைப்பு மேம்பாடு, கூட்டுறவு வங்கிகள் வாயிலாக கடன் வழங்குவதை அதிகரிப்பது, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்குவது, சுய உதவிக் குழுக்களை டிஜிட்டல் மயமாக்குவது மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களை கணினி மயமாக்குவது ஆகியவற்றிற்கு நிதியுதவி அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.