“பணம் கொடுக்குறதுல்லாம் பழசு” பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் நாம் தமிழர் கட்சி

 

“பணம் கொடுக்குறதுல்லாம் பழசு” பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும்  நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஆர்த்தி தேர்தல் செலவினங்களுக்காக பொதுமக்களிடம் பணம் வசூல் செய்து வரும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

“பணம் கொடுக்குறதுல்லாம் பழசு” பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும்  நாம் தமிழர் கட்சி

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக இந்த தேர்தலிலும் தனித்து களமிறங்கியுள்ள நாம் தமிழர் கட்சி கடந்த மார்ச் 7-ம் தேதி 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தியது. பெண் வேட்பாளர்கள் 117 , ஆண் வேட்பாளர்கள் 117 பேரும் நாம் தமிழர் கட்சி சார்பில் களம் காண்கின்றனர். அதுதான் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான தேர்தல் பரப்புரையில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

“பணம் கொடுக்குறதுல்லாம் பழசு” பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும்  நாம் தமிழர் கட்சி

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் ஆர்த்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம், ரயில்வே சாலை,நாகை சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார் வேட்பாளர் ஆர்த்தி .அத்துடன் அரசியல் கட்சிகள் வாக்களிக்க பொதுமக்களுக்கு பணம் பட்டுவாடா செய்து சிக்கி வரும் நிலையில் வேட்பாளர் ஆர்த்தியோ தனது தேர்தல் துண்டு பிரசுரம் உள்ளிட்ட தேர்தல் செலவினங்களுக்காக வணிக நிறுவனங்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து பணத்தை வசூலித்து வருகிறார்.