உள்ளாட்சி தேர்தல்; நாம் தமிழர் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

 

உள்ளாட்சி தேர்தல்; நாம் தமிழர் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

வருகின்ற உள்ளாட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்.6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது. வரும் 22ம் தேதியோடு வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். அரசியல் கட்சிகளுடன் அதன் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேட்பாளர்களை தேர்வு செய்துக் கொண்டிருக்கின்றன.

உள்ளாட்சி தேர்தல்; நாம் தமிழர் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சி தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 92 வேட்பாளர்களை அறிவித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உத்தரவிட்டுள்ளார். 5 மாவட்டங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகியிருக்கும் நிலையில் எஞ்சியுள்ள 4 மாவட்டங்களுக்கான பட்டியலும் விரைவில் வெளியாகும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.