நாம் தமிழர் கட்சியிலிருந்து திமுகவிற்கு சென்ற 1000 பேர்!

 

நாம் தமிழர் கட்சியிலிருந்து திமுகவிற்கு சென்ற 1000 பேர்!

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 1000 பேர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் இணைந்தனர்.

2009-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை பலரும் அதில் இருந்து வெளியேறி உள்ளனர். பலரும் இணைந்து இருக்கின்றனர். அண்மையில் கூட அக்கட்சியில் இருந்து விலகிய ராஜீவ்காந்தி திமுகவிலும் கல்யாணசுந்தரம் அதிமுகவிலும் இணைந்தனர். ஆனால் கட்சியிலிருந்து வெளியேறுபவர்கள் குறித்து எல்லாம் சீமான் கவலைப்படுவதே இல்லை

நாம் தமிழர் கட்சியிலிருந்து திமுகவிற்கு சென்ற 1000 பேர்!

இந்தநிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில், சிவகங்கை, திருவள்ளூர், மதுரை, வேலூர், ஈரோடு, கோவை, தென்காசி, சேலம், புதுக்கோட்டை, செங்கல்பட்டு, விழுப்புரம் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், பாசறைப் பொறுப்பாளர்கள் திமுகவில் இணைந்தனர். வேளச்சேரி தொகுதி மகளிர் பாசறைச் செயலாளர் உமா, திருவள்ளுர் தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் ஜெ.தயாளன், வேளச்சேரி தொகுதி மகளிர் பாசறை துணைத் தலைவர் முருகன், மாநில தகவல் தொழில்நுட்ப பாசறை இரா.செந்தில்குமார், தொழிற்சங்க பாசறை மாவட்டச் செயலாளர் சோழிங்கநல்லூர் தொகுதி பெருமாள், தொண்டாமுத்தூர் தொகுதிச் செயலாளர் கோவை சசி ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் கோ.டில்லிபாபு, மேட்டுப்பாளையம் தொகுதி இளைஞர் பாசறைச் செயலாளர் பிரபாகரன், வடசென்னை வடக்கு மாவட்டப் பொருளாளர் ரோ.சம்பத்குமார், , கோவை மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் சசிகுமார், வீரத்தமிழர் முன்னணி மாவட்டச் செயலாளர் வடசென்னை வடக்கு நா.அப்துல்காதர், இளைஞர் பாசறை இணைச் செயலாளர் ஆர்.கே.நகர் ஜெ.மணிகண்டன், திருவள்ளூர் தெற்கு மாவட்ட இளைஞர் பாசறை துணைச் செயலாளர் ர.மணிகண்டன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.