“சீமான் கையேந்தினால் அதற்கு பெயர் பிச்சை”

 

“சீமான் கையேந்தினால் அதற்கு பெயர் பிச்சை”

அரசியல்வாதிகள் எப்போதுமே அடுத்த தேர்தலை பற்றி தான் நினைப்பார்கள். ஆனால் தலைவர்கள் மட்டுமே அடுத்த தலைமுறையை பற்றி நினைப்பார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

“சீமான் கையேந்தினால் அதற்கு பெயர் பிச்சை”

ராஜபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ” நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் இலவசமாக வாஷிங் மிஷின் மிக்ஸி ,கிரைண்டர் போன்ற பொருட்கள் கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் அதையெல்லாம் மக்கள் வாங்கிக் கொள்ளும் அளவிற்கு அவர்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும் “என்றார்.

“சீமான் கையேந்தினால் அதற்கு பெயர் பிச்சை”

தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இலவசக் கல்வி, குடிநீர், இலவச மருத்துவம், மின்சாரம் ஆகியவற்றை கொடுப்போம். கல்வியில் தமிழகம் முதல் மாநிலமாக உயரும். சீமான் கை ஏந்தினால் அது பிச்சை; மக்கள் அனைவரும் ஒன்றாக இயங்கினால் அதற்கு பெயர் இலவசம்” என்றும் விமர்சித்தார். அரசியல்வாதிகள் எப்போதுமே அடுத்த தேர்தலை பற்றி தான் நினைப்பார்கள். ஆனால் தலைவர்கள் மட்டுமே அடுத்த தலைமுறையை பற்றி நினைப்பார்கள். அப்படி சிந்தித்த தலைவர்தான் காமராஜர். படிக்காத அவர் பள்ளிகளை திறந்தார். ஆனால் அதற்கு அடுத்து வந்தவர்கள் டாஸ்மாக்கை திறந்து மக்களை குடிக்க வைத்தார்கள்” என்றும் “நாங்கள் மக்களை ஆள நினைக்கவில்லை மக்களை வாழ வைக்க நினைக்கிறோம். அதனால் மாறுதலுக்கான தேர்தலாக இந்த தேர்தலை நினைத்துக் கொண்டு நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.