கள்ளநோட்டு தந்து மதுவாங்கிய மர்மநபர்: தேடுதல் வேட்டையில் போலீஸ்!

கள்ளநோட்டு தந்து மதுவாங்கிய மர்மநபர்: தேடுதல் வேட்டையில் போலீஸ்!

கள்ளநோட்டு கொடுத்து மதுபானம் வாங்கிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கள்ளநோட்டு தந்து மதுவாங்கிய மர்மநபர்: தேடுதல் வேட்டையில் போலீஸ்!

2019-2020 ஆம் ஆண்டு ரூபாய் நோட்டுகளை அச்சடித்தல் மற்றும் புழக்கத்தில் விடுதல் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், கள்ள நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், 10 ரூபாய் கள்ள நோட்டு 144.6 சதவீதமும், 50 ரூபாய் நோட்டு 28.7 சதவீதமும், 200 ரூபாய் நோட்டு 151.2 சதவீதமும், 500 ரூபாய் நோட்டு 37.7 சதவீதமும் அதிகரித்துள்ளதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கள்ளநோட்டு தந்து மதுவாங்கிய மர்மநபர்: தேடுதல் வேட்டையில் போலீஸ்!

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசலில் உள்ள டாஸ்மாக்கில் ரூ.500 கள்ள நோட்டு தந்து மதுபானங்களை மர்ம நபர் ஒருவர் வாங்கி சென்றுள்ளார். கடையின் மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் கள்ளநோட்டு கொடுத்து மது வாங்கியது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.