மேற்கு வங்க பா.ஜ.க எம்.எல்.ஏ மர்ம மரணம்… சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட ஜனாதிபதியிடம் மனு

 

மேற்கு வங்க பா.ஜ.க எம்.எல்.ஏ மர்ம மரணம்… சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட ஜனாதிபதியிடம் மனு

மேற்கு வங்க பா.ஜ.க எம்.எல்.ஏ மர்ம மரணம், சி.பி.ஐ விசாரணை , ஜனாதிபதியிடம் மனு, Mysterious death of West Bengal BJP MLA, Petition to President ,order CBI to investigate
மேற்கு வங்கத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் பா.ஜ.க எம்.எல்.ஏ மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பா.ஜ.க சார்பில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு திஜ்னாபூர் மாவட்டம் ஹேம்தாபாத் பா.ஜ.க எம்.எல்.ஏ தேபேந்தரநாத் ரேயின் உடல் நேற்று ஒரு செல்போன் கடையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மம்தா ஆட்சியில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ கொலை செய்யப்பட்டார் என்று பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் குற்றம்சாட்டினர். மேற்கு வங்கத்தின் வடக்கு மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டத்துக்கு பா.ஜ.க அழைப்பு விடுத்துள்ளது.

மேற்கு வங்க பா.ஜ.க எம்.எல்.ஏ மர்ம மரணம்… சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட ஜனாதிபதியிடம் மனுஇந்த நிலையில் கடந்த ஓராண்டில் பா.ஜ.க-வின் 105 நிர்வாகிகள் மர்மமான முறையில் இறந்துள்ளதாகவும் இது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி பா.ஜ.க சார்பில் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மேற்கு வங்க பா.ஜ.க எம்.எல்.ஏ மர்ம மரணம்… சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட ஜனாதிபதியிடம் மனுகுடியரசுத் தலைவரை சந்தித்த தலைவர்கள் கூறுகையில், “திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் ஆட்சியில் தொடர எந்த உரிமையும் இல்லை. எம்.எல்.ஏ கொலை வழக்கு தொடர்பாக மேற்கு வங்க அரசு மேற்கொள்ளும் விசாரணையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை” என்றனர்.
இதற்கிடையே இறந்த எம்.எல்.ஏ-வின் உடற்கூறு ஆய்வுகள் வெளியே வந்துள்ளன. அதில், “எம்.எல்.ஏ-வின் உடலில் எந்த காயமும் இல்லை. அவர் தூக்கில் தொங்கியதாலேயே உயிரிழப்பு ஏற்பட்டது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் தற்கொலை கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்ததாக போலீசாரும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.