6 ஆண்டுகள் ஆகியும் பெயர் கூட கண்டுபிடிக்க முடியாத மர்மமான மூளை நோய்… அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

6 ஆண்டுகள் ஆகியும் பெயர் கூட கண்டுபிடிக்க முடியாத மர்மமான மூளை நோய்… அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

நியூயார்க் டைம்ஸின் அறிக்கையின்படி, கனடாவின் நியூ பிரன்சுவிக் நகரில் மர்மமான மூளை நோய் தாக்குதல் குறித்து கண்டறியப்பட்டுள்ளது. இந்த மூளை தாக்குதல் நோயால் பாதிக்கப்பட்டோர் தங்கள் கனவுகளில் இறந்தவர்களைப் பார்ப்பதாக கூறப்படுகிறது. இது கனடா மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. நரம்பியல் நிபுணர்கள் இந்த நோய்க்கான காரணத்தைக் கண்டறிய இரவும் பகலும் உழைத்து வருகின்றனர்.

6 ஆண்டுகள் ஆகியும் பெயர் கூட கண்டுபிடிக்க முடியாத மர்மமான மூளை நோய்… அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சு மூலம் இந்த நோய் பரவுகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதே நேரத்தில், இந்த நோய்க்கு காரணம் கோவிட் தடுப்பூசி தான் என்று பல விஞ்ஞானிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இருப்பினும் இதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டறியப்படவில்லை. இந்த மூளை நோயானது 6 ஆண்டுகளுக்கு முன்பே கனடாவில் பரவ தொடங்கியது. முதலில் 12 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் முதற்கட்டமாக 6 பேர் இறந்தனர். ஆனால்கிட்டத்தட்ட 15 மாதங்களாக உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால் சிக்கியதால், கனடாவில் சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்நோயை மறந்து கொரோனா பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டனர். தற்போது மீண்டும் இந்நோயின் வீரியம் அதிகரிக்க தொடங்கியுள்ளதாம்.

6 ஆண்டுகள் ஆகியும் பெயர் கூட கண்டுபிடிக்க முடியாத மர்மமான மூளை நோய்… அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

6 ஆண்டுகால ஆகியும் இன்னும் இந்த நோயின் பெயரை கூட விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நோய் சுற்றுச்சூழலால் பரவுகிறதா என்ற கேள்வியை மக்கள் தொடர்ந்து கேட்கிறார்கள். இது மரபணு தானா? அல்லது மீன் அல்லது மான் இறைச்சியை சாப்பிடுவதன் மூலம் பரவுகிறதா? என்ற பல கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இதற்கு எதற்கும் பதிலில்லை.

6 ஆண்டுகள் ஆகியும் பெயர் கூட கண்டுபிடிக்க முடியாத மர்மமான மூளை நோய்… அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்!

இந்த மர்மமான நோய் குறித்த பொதுவான தகவல்களை மார்ச் மாதத்தில் நியூ பிரன்சுவிக்கின் தலைமை மருத்துவ அதிகாரி ஒரு செய்திக்குறிப்பில் குறிப்பிட்டபோது தான் இது பொதுமக்களுக்கு தெரியவந்தது. அறிவியலில் அசாதாரண முன்னேற்றம் இருந்தபோதிலும், மன நோய்கள் அல்லது நரம்பியல் தொடர்பான நோய்கள் குறித்த அறிவில் நாம் இன்னும் பின்தங்கியுள்ளோம் என்பதையே இது காட்டுகிறது.