‘விடாது கருப்பு’ போல இருக்கிறது மனித உடலின் மர்மங்கள்

 

‘விடாது கருப்பு’ போல இருக்கிறது மனித உடலின் மர்மங்கள்

சினிமாக்களிலும், தொலைக்காட்சிகளிலும் இயக்குனர்கள் ‘கிராபிக்ஸ்’ காட்சிகளால் நம்மை அதிர வைப்பார்கள்.ஆனால் அதை விடவும் பயங்கரமான காட்சிகள் நமது ஒவ்வொருவர் உடம்பிலுமே இருக்கிறது. இந்த மனித உடல் வெறும் எலும்பும் தோலும்தான் என்று கருதாதீர்கள். இந்த சரீரத்திற்குள் ஏராளமான ரகசிய சூட்சுமங்களை இறைவன் வைத்துள்ளான்.

‘விடாது கருப்பு’ போல இருக்கிறது மனித உடலின் மர்மங்கள்


ஒருவர் செத்துப் போனதும்.. அவ்வளவுதான்..’போய்ச் சேர்ந்து விட்டான்’ என்றுதானே நினைக்கிறீர்கள்.இல்லை. போனது அவனது மூச்சுக் காற்று மட்டும்தான்..செத்த உடலின் தசைகள் மேலும் ஒரு மணி நேரம் இயங்கிக் கொண்டிருக்கும்.செத்தவரின் ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை வேலை செய்யும். எலும்புகள் 4 நாட்களை வரை செயல்படும். கண்ணும் அவனது காதும்,சிறுநீரகமும் தொடர்ந்து 6 மணி நேரம் இயங்கிக் கொண்டே இருக்கும். உயிர் வாழும் ஒரு மனிதன் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9 லிட்டர் மூச்சுக் காற்றும், உட்கார்ந்திருக்கும் போது 18 லிட்டர் மூச்சுக் காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும் தேவைப்படுகிறது… ஒருவர் உயிர்வாழ 13 வகையான வைட்டமின்கள் உடலுக்குத் தேவைப்படுகிறது.

‘விடாது கருப்பு’ போல இருக்கிறது மனித உடலின் மர்மங்கள்


எல்லோருக்கும் தலா ஒரு ஜோடி கால்கள், கைகள்..கண்கள், காதுகள் கொடுத்திருக்கிறான் இறைவன். ஆனால் இவை இரண்டும் ஒரே அளவாக இருப்பதில்லை. ஒரு கைக்கும், இன்னொரு கைக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கும்.இது போல் கண், காது, கால் என இவை அனைத்துமே ஒன்று சிறியதாக இன்னொன்று பெரியதாக இருக்கும். கருவிலேயே இந்த உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லையாம். இதே போல் கை நடுவிரலின் நகம் வேகமாகவும், கட்டை விரல் நகம் மெதுவாகவும் வளர்கின்றன. கை விரல் நகத்தை விட கால்விரல் நகம் மெதுவாக வளரும்.
ஒரு மனிதனின் உயரத்தை பகலில் அளந்து பார்த்தால் குறைவாகவும் இரவில் அளந்து பார்த்தால் உயரம் கூடுதலாகவும் இருப்பான்.ஒவ்வொரு மனிதனும் பகலில் 8 மி.மீ உயரம் சுருங்கி இரவில் 8 மி.மீ உயர்கிறான். காரணம் பகலில் வேலை செய்யும்போது தண்டு வடக் குறுத்தெலும்பு ஈர்ப்பு விசை காரணமாக அழுத்துகின்றன. இதனால் உயரம் குறைகிறது. இரவில் விறைப்புத் தன்மை இல்லாமல் நெடுஞ்சான் கிடையாக படுத்து உறங்குவதால் உடம்பின் உயரம் கூடுகிறது.

‘விடாது கருப்பு’ போல இருக்கிறது மனித உடலின் மர்மங்கள்


உடல் தோலின் பருமன் சராசரியாக 1 மி.மீ. ஆனால் கண் இமைகளிலும் உள்ளங்கைகளிலும், கால் அடிப் பாதங்களிலும் பருமன் 4 முதல் 6 மி. மீட்டராக இருக்கிறது. மூளையில் ஏற்படும் வலியை நம்மால் உணர முடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின் வலியை உணர்த்துவது மூளைதான். பெண்களைவிட ஆண்களின் மூளை பெரியது. பெண்களை விட சுமார் 4 ஆயிரம் அதிக உயிரணுக்கள் ஆண்கள் மூளையில் இருக்கிறது. நமது சிறு நீரகம் ஒரே ஒரு வடிகட்டியால் ஆனதல்ல. அதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன.

‘விடாது கருப்பு’ போல இருக்கிறது மனித உடலின் மர்மங்கள்


நமது உடலில் உள்ள ரத்தம் முதன் முதலாக இதயத்திலிருந்துதான் புறப்படுகிறது. இந்த ரத்தம் 30 வினாடிகளில் உடல்முழுவதும் சுற்றி மீண்டும் இதயத்திற்கு வந்து சேர்ந்து விடும்.உங்கள் இதயம் என்ன அளவு இருக்கும் தெரியுமா? அவரவர் கைவிரல்கள் அனைத்தையும் பொத்திப் பார்த்தால் என்ன அளவு இருக்குமோ அதே அளவுதான் அவரவர் இதயமும் இருக்கும்…
ஒவ்வொரு மனித முகமும் வெவ்வேறுதான். ஆனால் ஒட்டு மொத்த உலக மனிதர்களின் முகங்களை 520 வகைகளுக்குள் அடக்கி விடலாம் என்பதுதான் உண்மை. –இர சுபாஸ் சந்திர போஸ்