• February
    24
    Monday

Main Area

Main



பா.ஜ.க-வை வீழ்த்தி மைசூரு மேயர் ஆன இஸ்லாமிய பெண்! - குவியும் பாராட்டு

tanseem
tanseem

மைசூரு மாநகராட்சி மேயலாக இஸ்லாமிய பெண் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மைசூரு மாநகராட்சி மேயர் தேர்தல் நடந்தது. இதில், மதச் சார்பற்ற ஜனதா தளம் சார்பில் தஸ்னீம் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாரதிய ஜனதா கட்சியின் கீதா யோகானந்த் போட்டியிட்டார். மைசூரு மாநகராட்சியில் பாரதிய ஜனதா கட்சிக்கு போதிய கவுன்சிலர்கள் இல்லாத நிலையில், எதிர்க்கட்சி கவுன்சிலர்களின் ஆதரவைப் பெற்று மேயர் ஆகிவிடலாம் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆனால், இந்த தேர்தலில் தஸ்னீம் 47 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கீதாவுக்கு 23 வாக்குகளே கிடைத்தது. இதன் மூலம் தஸ்னீம் மைசூரு மாநகராட்சியின் முதல் பெண் இஸ்லாமிய மேயராக, இளம் வயது மேயராக தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஶ்ரீதர் துணை மேயராக தேர்வு செய்யப்பட்டார்.

tanseem


மைசூரு மாநகராட்சியின் மொத்த கவுன்சிலர்கள் எண்ணிக்கை 64. இதுதவிர, எம்.எல்.ஏ, எம்.எல்.சி, எம்.பி-க்கள் வாக்குகளையும் சேர்த்தால் மொத்தம் 74 வருகிறது. இதில் பா.ஜ.க-வுக்கு 21 உறுப்பினர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 18, காங்கிரஸ் கட்சிக்கு 19 உறுப்பினர்களும் உள்ளனர். 
கடந்த ஆண்டு காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி முதல் முறை மேயராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டார். இரண்டாவது முறையாக மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த தஸ்னீம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ், மதச் சார்பற்ற ஜனதா தளம் இடையே கூட்டணி முறிந்ததாலும், மத்தியிலும் மாநிலத்திலும் பாரதிய ஜனதா ஆட்சியில் இருப்பதாலும் மைசூரு மாநகராட்சியைக் கைப்பற்றிவிட பா.ஜ.க முயற்சி மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட தஸ்னீமுக்குக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

2018 TopTamilNews. All rights reserved.