’என் மாமா கொலை செய்யப்பட்டார்’ சுரேஷ் ரெய்னாவின் கண்ணீர் ட்விட்

 

’என் மாமா கொலை செய்யப்பட்டார்’ சுரேஷ் ரெய்னாவின் கண்ணீர் ட்விட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலையான இரண்டு முகங்களாக அறியப்பட்டவர்கள் கேப்டன் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா.

’என் மாமா கொலை செய்யப்பட்டார்’ சுரேஷ் ரெய்னாவின் கண்ணீர் ட்விட்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்கம் முதலே இருக்கும் வீரர் ரெய்னா. எப்போதும் ரெய்னாவை சிஎஸ்கேவும் விட்டுக்கொடுத்தது இல்லை. அதற்கு ஏற்ப ஐபிஎல் என்றால் வெறி பிடித்ததைப் போல ரன் மிஷினாகி விடுவார் ரெய்னா.

ஐபிஎல் 2020 க்காக ஆகஸ்ட் 15-20 தேதிகளில் சென்னையில் நடைபெற்ற பயிற்சியில் ஆர்வத்தோடு கலந்துகொண்டார். சிரித்த முகத்தோடு ஐபிஎல் போட்டிகளில் ஆட, ஐக்கிய அமீரகத்திற்கும் சென்றார். ஆனால், என்ன காரணம் எனத் தெரியாமல் திடீரென்று இந்தியா திரும்பிவிட்டார்.

’என் மாமா கொலை செய்யப்பட்டார்’ சுரேஷ் ரெய்னாவின் கண்ணீர் ட்விட்

சுரேஷ் ரெய்னாவின் விலகல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரின் விலகலுக்கு பலரும் பலவித காரணங்களைச் சொன்னார். தோனிக்கும் ரெய்னாவுக்கும் மோதல், பால்கனி இல்லாத அறையைக் கொடுத்ததால் கோபமாகி சென்றுவிட்டார்… என இன்னும் பல காரணங்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசனும் ரெய்னா பலவற்றை இழந்துவிட்டார் என்று கூறியிருந்தார். பின் தன் கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால், சுரேஷ் ரெய்னா தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் இல்லை.

’என் மாமா கொலை செய்யப்பட்டார்’ சுரேஷ் ரெய்னாவின் கண்ணீர் ட்விட்

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா தற்போது ஒரு ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளார். ’பஞ்சாப்பில் உள்ள என் குடும்பத்துக்கு நடந்தது ரொம்பவே கொடூரமானது. என் மாமா கொலை செய்யப்பட்டதோடு, என் சகோதரர்களும் அத்தையும் தாக்கப்பட்டு, ஆபத்தான நிலைக்குப் போனார்கள். அதில், என் சகோதரன் நேற்று இரவு இறந்துவிட்டார். என் அத்தையும் ரொம்ப ரொம்ப சிக்கலான கட்டயத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தங்கள் குடும்பத்துக்கு நிகழ்ந்ததற்கு யார் காரணம் என்று தெரியவேண்டும். வேறு யாருக்கும் இப்படி ஆகிவிடாமல் காவல் துறை பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.