போட்டுக்கொடுத்த ம.செ.க்கள்; துரத்திய ஸ்டாலின் : பாஜகவுக்கு தாவிய எம்எல்ஏவின் குமுறல்!

போட்டுக்கொடுத்த ம.செ.க்கள்; துரத்திய ஸ்டாலின் : பாஜகவுக்கு தாவிய எம்எல்ஏவின் குமுறல்!

சமீபத்தில் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மதுரை திருப்பரங்குன்றம் எம்எல்ஏ மருத்துவர் சரவணன் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் தாமரை உறுதியாக மலரும் என்று தெரிவித்துள்ளார்.

போட்டுக்கொடுத்த ம.செ.க்கள்; துரத்திய ஸ்டாலின் : பாஜகவுக்கு தாவிய எம்எல்ஏவின் குமுறல்!

பிரபல செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், “நான் ஒரு மருத்துவர் கூடுதலாக சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்று எம்எல்ஏவாக விரும்பினேன். நான் எனக்கு கொடுக்கப்பட்ட நிதியை விட கூடுதலாக திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு செய்துள்ளேன். எனக்கு சீட்டு மறுக்கப்பட்டது அதிர்ச்சியை கொடுத்தது. நான் சுயேட்சையாக நின்று வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன். அதேதான் மக்கள் விரும்பினார்கள். ஆனால் சுயேட்சையாக நின்றால் வெற்றி இலக்கை எட்ட முடியுமா என்று சந்தேகம் வருகிறது. அதனால் பாஜகவில் இணைந்தேன். அத்துடன் நான் ஒரு மருத்துவராக உள்ளதால் கொரோனா தடுப்பு மருந்து உடனடியாக இந்தியாவிற்கு நடைமுறைக்கு வந்ததை எண்ணி மனம் நெகிழ்ந்து நான் பாஜகவில் இணைந்து உள்ளேன்” என்றார்.

போட்டுக்கொடுத்த ம.செ.க்கள்; துரத்திய ஸ்டாலின் : பாஜகவுக்கு தாவிய எம்எல்ஏவின் குமுறல்!

தொடர்ந்து பேசிய அவர், “13 இடைத்தேர்தல் வேட்பாளர்கள் 12 பேருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு மட்டும் மறுக்கப்பட்டுள்ளது . ஸ்டாலின் என்னை அரவணைத்து சென்றார்; என்னைப்பற்றி மாவட்ட செயலாளர்கள் திமுக தலைவர் ஸ்டாலினிடம் தவறாக கூறியுள்ளனர். ஆனால் நான் பாஜகவில் இணைந்த பிறகும் எனக்கு வாழ்த்து தெரிவித்தவர்களில் அதிகமானவர்கள் திமுகவினர் தான்” என்றார்.