“என் மகன் எதிலும் ஜெயிப்பான்” – எடப்பாடியார் மீது தாயார் வைத்திருந்த நம்பிக்கை

 

“என் மகன் எதிலும் ஜெயிப்பான்” – எடப்பாடியார் மீது தாயார் வைத்திருந்த நம்பிக்கை

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம், எடப்பாடி நெடுங்குளம் ஊராட்சி சிலுவம்பாளையத்தில் பூர்வீக வீட்டில், விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் கருப்ப கவுண்டர் மற்றும் தவசாயி அம்மாள் ஆவர். பழனிச்சாமிக்கு விஜயா என்ற அக்காளும், கோவிந்தராஜ் என்ற அண்ணனும் உண்டு பழனிச்சாமி கடைக் குட்டியாகப் பிறந்தவர். தந்தை சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தாயார் தவசாயியம்மாளை எடப்பாடி பழனிச்சாமி கவனித்து வந்தார்.கடுமையான அரசியல் பணிகளில் இருந்த போதும், அவ்வப்போது சொந்த கிராமத்திற்கு வந்து தாயாரை

“என் மகன் எதிலும் ஜெயிப்பான்” – எடப்பாடியார் மீது தாயார் வைத்திருந்த நம்பிக்கை

அக்கறையுடன் நலம் விசாரித்து ஆசி வாங்க அவர் தவறியது இல்லை.
இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களாக உடல் நலமில்லாமல் இருந்த தவசாயி அம்மாள் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டார். பின்னர் அவர் கடந்த 12-ந் தேதி நள்ளிரவு 12.15 மணிக்கு காலமானார்.அவருக்கு வயது 93.
தவசாயி அம்மாள் தனது மகன் பழனிச்சாமி மீது மிகுந்த நம்பிக்கை உடையவர்.

“என் மகன் எதிலும் ஜெயிப்பான்” – எடப்பாடியார் மீது தாயார் வைத்திருந்த நம்பிக்கை

மகனை சந்திக்கும் போதெல்லாம் “நீ கஷ்டப்பட்டு வளர்ந்தவன். உன்னைக் கடவுள் நல்லா வச்சுக்கிடுவார். உனக்கு எல்லாமே நல்லபடியாத்தான் நடக்கும்.தைரியமாக இரு” என்றுதான் பேசுவார். பதிலுக்கு எடப்பாடியும் “எல்லாம் உன் ஆசிர்வாதம்மா..நீ வாழ்த்தினாலே போதும்..என்னை வளர்ப்பதற்கு நீயும் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறாய்…எனக்கு மறந்து விடுமா..?” என்று பேசுவாராம். இந்த உரையாடல்கள் அனைத்தும் உறவினர்களுக்கு நன்றாகத் தெரிந்த விஷயம்.

“என் மகன் எதிலும் ஜெயிப்பான்” – எடப்பாடியார் மீது தாயார் வைத்திருந்த நம்பிக்கை


தவசாயியம்மாள் மிக எளிமையானவர். மகன் முதலமைச்சராக இருந்தாலும் இவர் அதே கிராமத்து பாணியில் கடைசி வரை வாழ்ந்தவர். பழைய சாதம் கேப்பைக்கூழ் கம்மந்தோசைகளைத்தான் அதிகம் விரும்பிச் சாப்பிடுவார். உறவினர்களிடம் கல,கலப்பாக பேசக் கூடியவர்.
தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றபோதுதான் இவரது முகம் வெளியில் தெரிய வந்தது..முதல்- அமைச்சராக மகன் பதவி ஏற்றதை தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ந்த தவசாயியம்மாள் அப்போது கூறியதாவது:-

“என் மகன் எதிலும் ஜெயிப்பான்” – எடப்பாடியார் மீது தாயார் வைத்திருந்த நம்பிக்கை


எங்கள் குடும்பம் சாதாரண விவசாயக் குடும்பம். எங்களது இளைய மகன் பழனிச்சாமி கோனேரிப்பட்டி அரசு பள்ளியில் படித்தான்.அப்போது நாங்கள் குடியிருந்த விவசாயத் தோட்டத்திற்கும், பள்ளிக்கும் 4 மைல் தொலை விருக்கும். தினசரி நடந்துதான் போய் படித்து வந்தான்.இதன் பிறகு குமாரபாளையம் அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்தான். தினசரி காவிரி ஆற்றை கடந்து கல்லூரிக்கு சென்று சிரமப்பட்டான். இதனால் அவனை விடுதியில் சேர்த்தோம். சிறு வயதாக இருந்த போது எங்கள் பகுதியில் சினிமா தியேட்டர் ஏதும் கிடையாது.

“என் மகன் எதிலும் ஜெயிப்பான்” – எடப்பாடியார் மீது தாயார் வைத்திருந்த நம்பிக்கை

வானொலியிலும், ஒலிபெருக்கியிலும் வரும் எம்.ஜி.ஆரின் பாடல்களை கேட்டு அவர் மீது விருப்பம் ஏற்பட்டு அ.தி.மு.கவில் சேர்ந்து வேலை செய்தான்.சிறு வயது முதல் ஏழை, எளிய மக்களோடு பழகிய பழனிச்சாமி மக்களின் இன்ப, துன்பங்களை நன்கு உணர்ந்தவன்.
என் மகன், மக்களால் நேசிக்கப்பட்ட எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் காட்டிய வழிப்படி நடந்து ஏழை, எளிய மக்கள் பாராட்டும் விதத்தில் நல்லாட்சி புரிவான். இதில் எனக்கு துளி அளவும் ஐயம் இல்லை.ஏழை, எளிய விவசாய மக்கள் படும் பல்வேறு சிரமங்களை நன்கு உணர்ந்து அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும் விதமாக செயல் படுவான். அதற்கு இறைவன் அருள் புரிவார் என்று நம்பிக்கையில் நானும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

“என் மகன் எதிலும் ஜெயிப்பான்” – எடப்பாடியார் மீது தாயார் வைத்திருந்த நம்பிக்கை

இதன் பின்னர் தவசாயி அம்மாள் இறக்கும் தருவாயில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உறவினர்களிடம் எடப்பாடி பழனிச்சாமியை நினைவு கூர்ந்து பேசியிருக்கிறார். “பழனிச்சாமி எப்படி இருக்கிறான்.? ஓய்வே இல்லாம ஓடிக்கிட்டே இருக்கிறான். அவனைப் பார்க்கணும் போல இருக்கு. சின்ன வயசுல அவன் எவ்வளவோ கஷ்டப்பட்டு வளர்ந்தான். அவனுக்கு விவசாயம் என்றால் உயிர்மூச்சு. மக்கள் மத்தியில அவனுக்கு நல்ல பேரு இருக்கு. எதிலும் அவன் ஜெயிப்பான். இறைவன் அருள் புரிவார்”இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.”
இர.சுபாஸ் சந்திர போஸ்