darbar
  • January
    29
    Wednesday

Main Area

Main



'என்னுடன் லட்சுமி இருக்கிறாள்...என் அடுத்த டார்கெட் இதுதான்': ஓபனாக வீடியோவில் உண்மையை உடைத்த நித்தியானந்தா

நித்தியானந்தா
நித்தியானந்தா

நித்தியானந்தாவைத் தேடுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.  வரும் 18-ஆம் தேதிக்குள் நித்தியானந்தா இருக்குமிடத்தைக் கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய பெங்களூரு காவல்துறைக்குக் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ttn

இந்நிலையில் உலகில் எங்கோ இருந்தபடி நித்தியானந்தா தினசரி உபதேசங்களை  தினமும்  யூட்யூப் மற்றும் பேஸ்புக்  போன்ற தளங்களில் சத்சங்கத்தில் சிரிக்க சிரிக்க பேசி வரும் நித்தியானந்தா புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சிவத்தை உணர்ந்தால், உங்களுக்குள் கைலாசா உருவாகும். என்னுடைய அடுத்த டார்கெட் ஸ்ரீலங்காவில் உள்ள நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம்' என்று வெளிப்படையாக  அறிவித்துள்ளார். 

ttn

தொடர்ந்து பேசிய அவர், 'ராவணன் ஒரு முட்டாள் . ராவணன் நேரடியாக கைலாசத்தைத் தொட்டுத் துாக்க முயன்றான்.அங்குள்ள  சிந்தாமணி மண்டபம் தான்  கைலாசத்தின் அருள் பொழிவுக்குக் காரணம் என்று நினைத்த அவன் ஈசனிடம் வேண்டி அதை பெற்று சென்று கைலாசத்தில் வைத்தான்' என்றார். 

ttn

மேலும், நான் அரசியல் பேச வரவில்லை. அயோத்தியில் ராமர் கோயில் கட்டினால்  இந்தியாவின் பொருளாதாரம் செழிக்கும். நான் எந்த அமைப்பிலும் இல்லை என்ற போதிலும், எனது சந்நியாசிகளும் சீடர்களும் ராமர் கோயில் கட்ட தேவையான பங்களிப்பை செலுத்துங்கள். என் பங்கும் ராமர் கோயிலுக்கு உண்டு. என்னிடம் எதுவும் இல்லை என்று நான் கூறமாட்டேன். என்னிடம் லட்சுமி இருக்கிறாள். அதனால் ராமர் கோவில் கட்ட முறையான வழியில் நான் பங்களிப்பேன்' என்று கூறியுள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.