இனி பெண்கள் ரயிலில் பாதுகாப்பாக பயணம் செய்யலாம்: ‘எனது தோழி’ திட்டம் தொடக்கம்!

 

இனி பெண்கள் ரயிலில் பாதுகாப்பாக பயணம் செய்யலாம்: ‘எனது தோழி’ திட்டம் தொடக்கம்!

ரயிலில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ‘எனது தோழி’ என்ற திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியிருக்கிறது.

ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு எனது தோழி’ என்ற திட்டம், தென் கிழக்கு ரயில்வேயில் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு பெண்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. அதனால் இந்த திட்டத்தை தற்போது அனைத்து ரயில்வே மண்டலங்களிலும் விரிவு படுத்தப்படுவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

இனி பெண்கள் ரயிலில் பாதுகாப்பாக பயணம் செய்யலாம்: ‘எனது தோழி’ திட்டம் தொடக்கம்!

இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் அவசரத் தேவைக்கு ‘182’ என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் கொடுக்கலாம். ரயில்வேத்துறை, ரயிலில் பயணம் செய்யும் பெண்களின் விவரங்களை சேகரித்து, குறிப்பாக தனியாக பயணம் செய்யும் பயணிகளின் விவரங்களை சேகரித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும். அந்த எண்ணில் புகார் ஏதும் கொடுக்கப்பட்டால், ஆர்பிஎஃப் வீரர்கள் பயணியின் இருக்கை எண் மற்றும் ரயில் பெட்டி எண்ணை சேகரித்து ரயில் நிற்கும் இடங்களில் உள்ள காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பார்கள்.

இனி பெண்கள் ரயிலில் பாதுகாப்பாக பயணம் செய்யலாம்: ‘எனது தோழி’ திட்டம் தொடக்கம்!

இது மட்டுமில்லாமல் ரயிலில் பயணிக்கும் பாதுகாப்பு படை காவலர்கள், தனியாக செல்லும் பெண்களை கண்காணித்து பாதுகாப்பு வழங்குவார்களாம். இந்த திட்டத்தின் படி, பெண்களின் பயணம் பாதுகாப்புடன் அமைவது உறுதி செய்யப்படும் என்றும் பெண்கள் அந்த எண்ணில் விடுக்கும் அவசர அழைப்புகளை மூத்த அதிகாரிகளும் கண்காணிப்பார்கள் என்றும் இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.