’உலகக் கோப்பை மீதே என் கவனம் இருக்கிறது’ மிதாலி ராஜ் ஆர்வம்

 

’உலகக் கோப்பை மீதே என் கவனம் இருக்கிறது’ மிதாலி ராஜ் ஆர்வம்

ஆண்கள் கிரிக்கெட் அணி ஆடும் விளையாட்டுகளைப் போன்ற மகளிர் கிரிக்கெட் போட்டிகளும் பார்வையாளர்களால் விரும்பி பார்க்கப்படுகிறது.  மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கிறது.

கிரிக்கெட் ரசிகர்கள் இந்தப் போட்டியைக் காண ஆவலோடு காத்திருக்கிறார்கள். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் மிதாலி ராஜ். டி20 போட்டிகளுக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டன்.

’உலகக் கோப்பை மீதே என் கவனம் இருக்கிறது’ மிதாலி ராஜ் ஆர்வம்

ஒருநாள் போட்டிகளுக்கான அணிகளின் தர வரிசைப் பட்டியலில் இந்திய மகளிர் அணி இரண்டாம் இடத்தில் உள்ளது. முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணி உள்ளது,

அடுத்த ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளின் அறிவிப்பு வெளியானதும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் வர்ணனையாளர் லிசா, தனது டிவிட்டர் பக்கத்தில் மிதாலி ராஜ் உள்ளிட்ட சிலரை டேக் செய்து இன்னும் கூடுதலாக ஓராண்டு காத்திருக்க வேண்டும்’ என்பதாகப் பதிவிட்டிருந்தார்.

’உலகக் கோப்பை மீதே என் கவனம் இருக்கிறது’ மிதாலி ராஜ் ஆர்வம்

அதற்குப் பதில் அளித்த மிதாலி ராஜ், ’ 2022 உலகக்கோப்பை மீதே என் கவனம் இருக்கிறது. கோப்பை வெல்ல வேண்டும் என்ற குறிக்கோளை அடைய ஆர்வமாக இருக்கிறேன். அதற்கான உடல் வலியோடு இருக்கிறேன்’ என்று கூரியுள்ளார்.

மிதாலி ராஜ் உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். ஒருநாள் போட்டிகளில் மட்டும் 6888  ரன்களை குவித்திருக்கிறார்.  இவரைப்போலவே ஹர்மன்ப்ரீத் கவுரும் அதிரடி ஆட்டக்காரரே.