Home லைப்ஸ்டைல் மட்டன் சுக்கா கிரேவியும், மீன் கட்லெட்டும்

மட்டன் சுக்கா கிரேவியும், மீன் கட்லெட்டும்

விடுமுறை நாள் என்றால் எல்லோருமே வாய்க்கு ருசியான அசைவம் சாப்பிட விரும்புவார்கள்.அதிலும் பெரும்பாலான ஆண்கள் மதியச் சாப்பாட்டை நன்கு ஒரு பிடி, பிடித்து விட்டு சுமார் 2 மணி நேரம் தூங்கி எழ வேண்டும் என நினைப்பார்கள். இது உடல் சோர்வை தணிப்பதோடு, புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தும்.அடுத்த ஒரு வாரத்திற்கு நன்றாக ஓடுவார்கள்.
மனித உடலுக்குத் தேவையான எல்லா நல்ல சத்துக்களும் ஆட்டுக்கறியிலும், மீன் வகைகளிலும் உள்ளன எனப் பல ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. ஆகவே உங்கள் குடும்பத்தாருக்கு மதிய சாதத்தோடு மட்டன் சுக்கா கிரேவியும்,. மீன் கட்லெட்டும் சமைத்துக் கொடுத்து அசத்துங்கள்.

மட்டன் சுக்கா கிரேவி
தேவை: மட்டன் 1/2 கிலோ, பல்லாரி1, தக்காளி 3, புதினா இலை 1 கப், பெருஞ் சீரகம் 1 தேக்கரண்டி, சீரகம் 2 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி,எண்ணெய்- தேவைக்கு,இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 மேஜைகரண்டி, தயிர் 2 மேஜைகரண்டி, வத்தல் தூள் 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி, மல்லி தூள் 2 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் 1 தேக்கரண்டி,லெமன் ஜூஸ் 1 தேக்கரண்டி,உப்பு – தேவைக்கு,மல்லி இலை சிறிதளவு
செய்முறை: பெருஞ்சீரகம், சீரகம் மற்றும் மிளகு இவற்றை கொறுகொறுப்பாக பவுடர் ஆக்கிக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். தக்காளி சேர்த்து எண்ணெய் நன்கு பிரிந்து வரும் அளவிற்கு வதக்கவும்.

பின் மட்டன், 2 மே.கரண்டி தயிர், தனி வத்தல் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், உப்பு, புதினா இலை மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மூடி 4 விசில் போட்டு பின் 2 அல்லது 3 நிமிடங்கள் சிம்மில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
பிரை பேனில் 3 மேஜைகரண்டி எண்ணெய் ஊற்றி வேக வைத்ததை அதில் சேர்த்து தண்ணீரை நன்கு வற்ற வைக்கவும்.பின் பவுடர் செய்து வைத்ததை இதில் சேர்த்து கிளரவும். கரம் மசாலா மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து கிளரி மல்லி இலை தூவி இறக்கவும்.சுவையான மட்டன் சுக்கா தயார். தேவைக்கு தகுந்தவாறு தண்ணீரை வற்ற வைத்துக் கொள்ளவும்.

மீன் கட்லெட்
தேவை: 200 கிராம் மீன்,100 கிராம்உருளைக்கிழங்கு,1பச்சை மிளகாய்,சிறிதளவு கறிவேப்பிலை,இஞ்சி பூண்டு விழுது,2வெங்காயம்,1 மேசைக்கரண்டி மிளகாய்த் தூள்,1/2 மேசைக்கரண்டி தனியா தூள்,1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்,1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்,1/2 தேக்கரண்டி மிளகுத்தூள்,தேவையான அளவுஉப்பு,1 மேசைக்கரண்டி எலுமிச்சை சாறு,1/2 கப்ரவை,1முட்டை,தேவையான அளவு எண்ணெய்


செய்முறை: மீனை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்ஒரு வாணலியில் தண்ணீர் சேர்த்து உப்பு மஞ்சள் தூள் சேர்த்து சுத்தம் செய்த மீனை சேர்த்து நன்றாக வேகவைத்து எடுக்கவும்வெந்ததும் மீன் முள் நீக்கி பொடியாக உதிர்ந்து விடவும்.மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாயை சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்வதங்கியதும் உப்பு,மஞ்சள் தூள், மிளகாய் தூள, தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்பின்னர் அதில் வேக வைத்துள்ள மீனை சேர்த்து சிறிது நீர் தெளித்து மசாலா நன்றாக இறங்கும் வரை வதக்கவும்.

வதங்கியதும் வேகவைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கிளறி விடவும்பின்னர் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.இந்த கலவை ஆறியதும் உருண்டையாக உருட்டி சிறு தட்டைகளாக தட்டி வைக்கவும்.
முட்டையை உப்பு மிளகுத்தூள் சேர்த்து நன்கு அடித்து வைத்து கொள்ளவும்.உருட்டிய தட்டைகளை முட்டை கலவையில் முக்கி ரவையில் பிரட்டி வைத்து கொள்ளவும்.பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரட்டிய தட்டைகளை பொண்ணிறமாக பொரித்து எடுக்கவும்.சூடான மீன் கட்லெட் தயார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

சமயபுரம் கோவிலில் துர்கா ஸ்டாலின்!

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் திமுக தலைவர் முக ஸ்டாலினின் மனைவி துர்கா, இன்று தரிசனம் செய்தார். விடியலுக்கான முழக்கம் என்ற பெயரில் திமுகவின் சிறப்பு...

பாஜகவுக்கு ஒதுக்கிய 20 தொகுதிகள் எவை? அதிமுக- பாஜக மீண்டும் பேச்சுவார்த்தை

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் 12ம் தேதி தொடங்கவிருப்பதால், தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை விரைவில் முடித்துவிட அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. 3ஆவது முறையாக ஆட்சியை...

தமிழரா? திராவிடரா? ஸ்டாலினை ஒரு கை பார்ப்பேன் என கூறிவிட்டு பின்வாங்கிய சீமான்!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 10-ஆம் தேதி தொடங்குகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளில்...

இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதிய விபத்தில், பெயிண்டர் பலி!

கரூர் கரூர் அருகே இருசக்கர வாகனம் மீது மினிவேன் மோதிய விபத்தில் பெயிண்டர் பரிதாபமாக உயிரிழந்தார் கரூர் மாவட்டம், தென்னிலை அருகேயுள்ள...
TopTamilNews