ஆஞ்சியோ சிகிச்சை வெற்றி… முத்தையா முரளிதரன் டிஸ்சார்ஜ்!

 

ஆஞ்சியோ சிகிச்சை வெற்றி… முத்தையா முரளிதரன் டிஸ்சார்ஜ்!

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன். இவர் நேற்று தனது 49ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஆனால் நேற்று திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதனால் சென்னை அப்போலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆஞ்சியோ சிகிச்சை வெற்றி… முத்தையா முரளிதரன் டிஸ்சார்ஜ்!

ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளவே மருத்துவமனையில் சேர்ந்தார் என்று கூறப்பட்டது. இச்சூழலில் அவருக்கு வெற்றிக்கரமாக சிகிச்சை முடிந்துள்ளது. இதையடுத்து முத்தையா முரளிதரன் இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகிறார்.

ஆஞ்சியோ சிகிச்சை வெற்றி… முத்தையா முரளிதரன் டிஸ்சார்ஜ்!

சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளையும் ஒருநாள் போட்டிகளில் 543 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் சென்னை, பெங்களூரு அணிகள் சார்பாக விளையாடியுள்ளார். தற்போது சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக உள்ளார்.