வருவாய் அமோகம்… லாபமும் சூப்பர்… உற்சாகத்தில் முத்தூட் பைனான்ஸ்

 

வருவாய் அமோகம்… லாபமும் சூப்பர்… உற்சாகத்தில் முத்தூட் பைனான்ஸ்

முத்தூட் பைனான்ஸ் 2020 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.930.80 கோடி ஈட்டியுள்ளது.

பிரபல வங்கி அல்லாத நிதி நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. முத்தூட் பைனான்ஸ் 2020 செப்டம்பர் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.930.80 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 2.5 சதவீதம் அதிகமாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் அந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.908.54 கோடி ஈட்டியுள்ளது.

வருவாய் அமோகம்… லாபமும் சூப்பர்… உற்சாகத்தில் முத்தூட் பைனான்ஸ்
முத்தூட் பைனான்ஸ்

2020 செப்டம்பர் காலாண்டில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,824.19 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 17.4 சதவீதம் அதிகமாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.2,406.39 கோடி ஈட்டியிருந்தது.

வருவாய் அமோகம்… லாபமும் சூப்பர்… உற்சாகத்தில் முத்தூட் பைனான்ஸ்
முத்தூட் பைனான்ஸ்

கடந்த செப்டம்பர் காலாண்டில் புதிதாக 4.40 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் ரூ.3,653 கோடி கடன் வழங்கியுள்ளதாக முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் முத்தூட் பைனான்ஸ் நிறுவன பங்கு விலை 2.83 சதவீதம் உயர்ந்து ரூ.1,255.30ஆக அதிகாித்தது.