களை கட்டிய தங்க நகை கடன்…. ரூ.836 கோடி லாபம் பார்த்த முத்தூட் பைனான்ஸ்

 

களை கட்டிய தங்க நகை கடன்…. ரூ.836 கோடி லாபம் பார்த்த முத்தூட் பைனான்ஸ்

முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் (2020 ஜனவரி-மார்ச்) ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.835.78 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 52.4 சதவீதம் அதிகமாகும். 2019 மார்ச் காலாண்டில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.548.56 கோடி ஈட்டியிருந்தது. 2020 மார்ச் காலாண்டில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.2,633.58 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் அந்நிறுவனத்தின் வட்டி வருவாய் மட்டும் ரூ.2,562.96 கோடியாகும்.

களை கட்டிய தங்க நகை கடன்…. ரூ.836 கோடி லாபம் பார்த்த முத்தூட் பைனான்ஸ்

2019-20 முழு நிதியாண்டில் (2019 ஏப்ரல்- 2020 மார்ச்) முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் ஒட்டு மொத்த லாபம் 51 சதவீதம் அதிகரித்து ரூ.3,168.68 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் அதே நிதியாண்டில் அந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.9,683.98 கோடியாக அதிகரித்துள்ளது. முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு 2019-20 நிதியாண்டுக்கு பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு இடைக்கால டிவிடெண்டாக ரூ.15 வழங்குவதாக அறிவித்துள்ளது.

களை கட்டிய தங்க நகை கடன்…. ரூ.836 கோடி லாபம் பார்த்த முத்தூட் பைனான்ஸ்

முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் செயல்பாடு குறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அலெக்சாண்டர் முத்தூட் கூறுகையில், லாக்டவுன் காரணமாக மார்ச் மாதத்தின் கடைசி 15 தினங்களை தவிர்த்து சென்ற நிதியாண்டு முழுவதும் தங்க நகைக் கடன் வர்த்தகம் சிறப்பாக இருந்ததால் நிறுவனத்தின் செயல்திறன் நன்றாக இருந்தது. ஒட்டு மொத்தத்தில் தேவை நன்றாக இருந்தது மற்றும் இது எங்கள் நல்ல செயல்திறனுக்கான முக்கிய காரணம் என தெரிவித்தார்.