முத்தூட் கேப்பிட்டல் நிகர லாபம் ரூ.13.60 கோடியாக குறைந்தது…

 

முத்தூட் கேப்பிட்டல் நிகர லாபம் ரூ.13.60 கோடியாக குறைந்தது…

கேரளாவை சேர்ந்த முத்தூட் பப்பச்சன் குழுமத்தை சேர்ந்த நிறுவனம் முத்தூட் கேப்பிட்டல். வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனமான முத்தூட் கேப்பிட்டல் குறிப்பாக இரு சக்கர வாகனங்களுக்கு கடன் வழங்குகிறது. இந்நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டு நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. அந்த காலாண்டில் அந்நிறுவனத்தின் நிகர லாபம் கடுமையான சரிவு கண்டுள்ளது.

முத்தூட் கேப்பிட்டல் நிகர லாபம் ரூ.13.60 கோடியாக குறைந்தது…

2020 மார்ச் காலாண்டில் முத்தூட் கேப்பிட்டல் நிறுவனம் நிகர லாபமாக ரூ.13.6 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 40 சதவீதம் குறைவாகும். 2019 மார்ச் காலாண்டில் அந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.22.7 கோடி ஈட்டியிருந்தது. இந்நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ள போதிலும் லாபம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முத்தூட் கேப்பிட்டல் நிகர லாபம் ரூ.13.60 கோடியாக குறைந்தது…

முத்தூட் கேப்பிட்டல் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.146.80 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் அதிகமாகும். 2019 மார்ச் காலாண்டில் ரூ.137.20 கோடியை முத்தூட் கேப்பிட்டல் வருவாயாக ஈட்டியிருந்தது. 2020 மார்ச் காலாண்டில் முத்தூட் கேப்பிட்டல் மொத்தம் ரூ.347.5 கோடிக்கு கடன் வழங்கியுள்ளது.