“எல்லாத்தையும் மாநில அரசு செய்யனும்னா மத்திய அரசு எதற்கு?”

 

“எல்லாத்தையும் மாநில அரசு செய்யனும்னா மத்திய அரசு எதற்கு?”

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனாவால் இறந்துபோனவர் குடும்பங்களுக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கில் நேற்று முன்தினம் மத்திய அரசு பிராமணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இதில் மரணித்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரண நிதியாக மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. முன்னர் ஜிஎஸ்டி வரி மூலம் மாநிலங்களின் நிதி வருவாயைப் பெருமளவு மத்திய அரசு வசப்படுத்தியுள்ளது.

Demands made in memorandum submitted by Tamil Nadu Chief Minister M.K.  Stalin to Prime Minister Narendra Modi - The Hindu

ஜிஎஸ்டி வரி விதிப்பால் தமிழகத்துக்கு ஏற்பட்ட நிதி இழப்பை, மத்திய அரசு ஈடு செய்யும் எனக் கொடுத்த உறுதிமொழி மதிக்கப்படவில்லை. 2020 மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா பரவல், முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை எனத் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், தடுப்புப் பணிகளை மாநில அரசுகள் தனது சொந்த நிதியாதாரத்தில் இருந்து மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் வகையில், தமிழக அரசு பெரும் கடன் சுமைக்கு ஆளாகியுள்ளது. திமுக அரசு குடும்பங்களுக்கு தலா ரூ.4,000 ரொக்கம், 14 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கியுள்ளது.

“எல்லாத்தையும் மாநில அரசு செய்யனும்னா மத்திய அரசு எதற்கு?”

இது தவிர, உயிர் காக்கும் மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர், மருந்துவப் பரிசோதனைக் கருவிகள், தடுப்பு மருந்துகள், முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை, உயிரிழந்த முன்களப் பணியாளர்கள் உயிரிழப்புக்கு இழப்பீடு என எல்லா வகைச் செலவினங்களையும் மாநில அரசே ஏற்கும்படி நிர்பந்திக்கப்பட்டுள்ளது. ஆரோக்கிய வாழ்வில் எதிர்பாராது ஏற்பட்டிருக்கும் இயற்கை பேரிடருக்கு மத்திய அரசு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மாநிலங்களுக்குப் போதுமான நிதி உதவி செய்யவில்லை. மாறாக அறிவுரைகளும், ஆலோசனைகளும் மட்டுமே தெரிவித்து வருகின்றது.

“எல்லாத்தையும் மாநில அரசு செய்யனும்னா மத்திய அரசு எதற்கு?”

இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கும் பொறுப்புக்கு மாநிலங்களைக் கைகாட்டிவிட்டு, மத்திய அரசு தனது கடமைப் பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பது எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. எனவே, மத்திய அரசு தனது நிலையை மறுபரிசீலனை செய்து, கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பங்கள் அனைத்துக்கும் நிபந்தனையின்றி நேரடியாக நிிவாரண நிதி வழங்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.