“பிரபலங்களை கட்சியில் இணையுமாறு பாஜக நிர்பந்திக்கிறது”

 

“பிரபலங்களை கட்சியில் இணையுமாறு பாஜக நிர்பந்திக்கிறது”

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், “தொழிலதிபர்களிடம் நன்கொடை கேட்பது கொடுக்கவில்லை என்றால் வருமான வரி துறையின் மூலம் நெருக்கடி கொடுப்பது, மக்களுக்கு அறிமுகமான பிரபலங்களை அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்சியில் சேர நிர்பந்தம் கொடுப்பது, அரசியல் கட்சியை தொடங்க சொல்வது இல்லை என்றால் அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பது என பல்வேறு விஷம வேலைகளை பாஜக செய்து வருகின்றது. தமிழகத்திலும் இந்த முயற்சியை பாஜக ஒரு பிரபலத்தின் மூலம் கையாள முயற்சித்தது ஆனால் அந்தப் பிரபலம் பாஜகவின் முகத்தில் கரியை பூசி விட்டு சென்றுவிட்டார், அதேபோல் முன்னாள் கிரிக்கெட் வீரர் கங்குலி கட்சியில் சேர பாஜக நிர்ப்பந்தித்தது. தற்போது அவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இதுபோன்று பாஜக செயல்படுவது ஜனநாயகம் அல்ல சர்வாதிகாரம்,

“பிரபலங்களை கட்சியில் இணையுமாறு பாஜக நிர்பந்திக்கிறது”

ஆண்டாண்டு காலமாக தைப்பூச விழா கொண்டாடப்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் தற்போது தமிழக முதலமைச்சர் தைப்பூச விழாவை பொது விடுமுறையாக அறிவித்துள்ளார். இது யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே என்பது போல் உள்ளது, அனைத்து விஷயத்திலும் தளர்வை ஏற்படுத்தி விட்டு ஊரடங்கு உத்தரவை தொடர்வது எதிர்க்கட்சியினரை இயங்காமல் தடை செய்வதற்கும் ஆளுங்கட்சியினர் சுதந்திரமாக செயல்படுவதற்கும் இந்த உத்தரவு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே உடனடியாக 144 தடை உத்தரவை திரும்பப் பெற வேண்டும்

பாஜக நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிக்காமலும் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்காமலும் நன்றாக உள்ள பாராளுமன்ற கட்டிடத்தை பல கோடி ரூபாய் செலவு செய்து கட்ட நினைப்பது ஏற்புடையதல்ல, ஜனநாயக முறைப்படி போராட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும், போராட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை என்றால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். அதிலிருந்து வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். ரஜினி சிறந்த நடிகர் அவரிடம் யார் வேண்டுமானாலும் ஆதரவு கேட்கலாம் ஏன் திமுக கூட்டணிக்கு கூட ரஜினியின் ஆதரவு இருக்கலாம்” எனக் கூறினார்.