பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமான மாற்றுத்திறனாளிப் பெண்… கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரிய தந்தை!

 

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமான மாற்றுத்திறனாளிப் பெண்… கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரிய தந்தை!

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமான சிறுமியின் தந்தை தனது மகளுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரி மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் குவாலியர் பெஞ்சில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த சம்பவம் மத்தியபிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் உள்ள போர்சாவில் நடந்துள்ளது. அந்த சிறுமி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த சூழ்நிலையில் வழக்கின் தீவிரத்தை கண்டு, உயர்நீதிமன்றத்தின் குவாலியர் பெஞ்ச் வழக்கை குழந்தைகள் நல அமைப்பு மற்றும் பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டு அலுவலரை அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

பின்னர் நீதிமன்றம் குழந்தை பிறந்தப்பிறகு குழந்தையை ஒப்படைத்து விட்டு தனியே செல்லலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. ஏனெனில் பிறந்த குழந்தைக்கு பெற்றோரை அளிப்பது எளிது. இந்த விவகாரத்தில் ஒத்துழைக்குமாறு கலெக்டர் மொரேனாவுக்கு உயர் நீதிமன்றத்தின் குவாலியர் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பமான மாற்றுத்திறனாளிப் பெண்… கருக்கலைப்பு செய்ய அனுமதி கோரிய தந்தை!

பாதிக்கப்பட்ட சிறுமியின் மூத்த சகோதரி அந்தச் சிறுமியிடம் விசாரித்தபோது பலாத்காரம் பற்றி கூறியுள்ளார். மேலும் குற்றவாளிகளின் பெயரையும் எழுதிக்கொடுத்துள்ளார். அந்த சிறுமியின் மூத்த சகோதரி மற்றும் தந்தை குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பின்னர், பாக்ஸோ நீதிமன்றம் மொரேனாவில் பெண் குழந்தையை கருக்கலைப்பு செய்ய தந்தை விண்ணப்பித்தார். ஆனால் கருக்கலைப்பை பாக்ஸோ நீதிமன்றம் அனுமதிக்க முடியாது என விண்ணப்பத்தை நிராகரிக்கத்தது. இதன் காரணமாக, கருக்கலைப்புக்கு அனுமதி கோரி மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் குவாலியர் பெஞ்சில் மனு தாக்கல் செய்யப்பட்டது.