கல்லீரல், பெருங்குடலையும் தாக்கும் மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்!

 

கல்லீரல், பெருங்குடலையும் தாக்கும் மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்!

கொரோனா வைரஸ் மாற்றம் அடைந்துகொண்டே இருக்கிறது. இங்கிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்காவில் இந்த மாற்றம் அடைந்த அல்லது வீரியம் அடைந்த கொரோனா வைரஸ் காரணமாக கொரோனாத் தொற்று பரவுதல் வேகம் அதிகரித்தது. D614G mutation எனப்படும் இந்த மாறுதல் வைரஸ் மனித செல்களில் அதிக பாதிப்பையும், எட்டு மடங்கு அதிக வேகமாக பரவுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கல்லீரல், பெருங்குடலையும் தாக்கும் மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்!

இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, பிரேசிலில் பரவி வரும் வீரியம் மிக்க கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு தொடர்பாக இ-லைஃப் என்ற மருத்துவ இதழில் ஆய்வுக் கட்டுரை வெளியாகி உள்ளது. அதில் கொரோனா வைரஸ் கிருமியில் ஏற்பட்ட மாற்றம் அதை மேலும் வேகமாக பரவக் கூடியதாக மாற்றியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த பிறழ்வு 2020ம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஏற்பட்டிருக்கலாம். தற்போது உலகம் முழுக்க மிக வேகமாக பரவும் மற்றும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் தொற்றாக இது உள்ளது.

இந்த மாற்றம் வைரஸ் தொற்றை எந்த அளவுக்கு ஆபத்தானதாக மாற்றும் என்பதற்கான ஆய்வை மேற்கொண்டார்கள். அதில் இந்த மாற்றம் அடைந்த D614G வைரஸ் மனிதனின் நுரையீரல் மட்டுமின்றி கல்லீரல் மற்றும் பெருங்குடல் செல்லையும் பாதிக்கும் என்று கண்டறிந்துள்ளனர்.

இந்த வைரஸ் கிருமியையும் தொடக்கத்தில் வேகமாக பரவிய வைரஸ் கிருமியையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது புதிய மாற்றம் அடைந்த வைரஸ் எட்டு மடங்கு வேகமாகப் பரவக் கூடியது என்பது தெரியவந்தது. மேலும் இந்த மாற்றம், இந்த வைரஸை அதிக ஆற்றல் கொண்டதாகவும் அதிக எதிர்ப்பு சக்தி கொண்டதாகவும் மாற்றியுள்ளது.

இந்த மாறுதல் அடைந்த வைரஸ் மிகத் திறமையாக, அதிக ஆற்றலுடன் மனித செல்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, எதிர்காலத்தில் தயாரிக்கப்படும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசிகளில் இந்த வைரஸ் கிருமியின் புரதம் சேர்க்கப்படுவது அவசியம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.