மத்திய அரசுடன் முற்றும் மோதல்… இந்தியாவில் ட்விட்டருக்கு தடையா?

 

மத்திய அரசுடன் முற்றும் மோதல்… இந்தியாவில் ட்விட்டருக்கு தடையா?

பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் யார் வேண்டுமானாலும் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லலாம் என்பது தான் ஸ்பெஷாலிட்டி. ஆனால் அதற்குத் தான் மத்திய அரசின் புதிய ஐடி விதிகள் வேட்டு வைத்தன. சமூக ஊடக நிறுவனங்கள் புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பது போன்றவற்றுக்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணி நேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை அரசுடன் பகிர வேண்டும் போன்ற விதிகள் விதிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசுடன் முற்றும் மோதல்… இந்தியாவில் ட்விட்டருக்கு தடையா?

இதற்கு உடன்பட்டால் இந்தியாவில் தொழில் நடத்தலாம். இல்லையென்றால் அமெரிக்காவிற்குச் சென்றுவிடலாம் என்று மத்திய அரசு கறார் காட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் விதிகளை மாற்றுவது குறித்து எதுவும் பேசக் கூடாது. வேண்டுமென்றால் கால அவகாசம் தருகிறோம் யோசித்து உடன்படுங்கள் என்கிறது. பேஸ்புக் முழுவதுமாக உடன்படுவதாக ஒப்புக்கொண்டு விட்டது. ஆனால் வாட்ஸ்அப்பும் ட்விட்டரும் தண்ணி காட்டி வருகின்றன. இந்தியர்களின் கருத்துரிமையைச் சிதைக்கும் வண்ணம் புதிய விதிகள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டின.

மத்திய அரசுடன் முற்றும் மோதல்… இந்தியாவில் ட்விட்டருக்கு தடையா?

இதற்கு மறுப்பு தெரிவித்து மத்திய அரசு கண்டன அறிக்கை வெளியிட்டது. இச்சூழலில் வழக்கறிஞர் அமித் ஆச்சார்யா என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், மத்திய அரசு கொண்டு வந்த புதிய ஐடி விதிமுறைகளை பின்பற்ற சமூக வலைதளங்களுக்கு 3 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டும் ட்விட்டர் புகார் பெறுவதற்கான அதிகாரியை நியமிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. ஆகவே தாமதம் செய்யாமல் உடனடியாக அதிகாரியை நியமிக்க உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மத்திய அரசுடன் முற்றும் மோதல்… இந்தியாவில் ட்விட்டருக்கு தடையா?

இந்த மனு நீதிபதி ரேகா பள்ளி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ட்விட்டர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விசாரணை அதிகாரியை நியமித்துள்ளதாக தெரிவித்தார். ஆனால், இதனை மறுத்த மத்திய அரசு வழக்கறிஞர், புகாரைப் பெறுவதற்கான அதிகாரியை ட்விட்டர் நிறுவனம் நியமிக்கவில்லை என வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, ட்விட்டர் நிறுவனம் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். கடைப்பிடிக்காவிட்டால் மத்திய அரசு ட்விட்டருக்கு தடை விதிக்கலாம் என்று உத்தரவிட்டார்.