ஈரோட்டில் எளிமையான முறையில் ரம்ஜானை கொண்டாடிய இஸ்லாமியர்கள்!

 

ஈரோட்டில் எளிமையான முறையில் ரம்ஜானை கொண்டாடிய இஸ்லாமியர்கள்!

ஈரோடு

ஈரோட்டில் கொரோனா பரவல் காரணமாக இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே எளிமையான முறையில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான், நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை ரம்ஜான் பண்டிகையின்போது மாவட்டத்திலுள்ள 40-க்கும் மேற்பட்ட ஈத்கா மைதானங்களிலும், 200-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெறுவது வழக்கம். வஉசி பூங்காவில் மாவட்ட அரசு காஜி தலைமையில் நடைபெறும் சிறப்பு தொழுகையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்பார்கள்.

ஈரோட்டில் எளிமையான முறையில் ரம்ஜானை கொண்டாடிய இஸ்லாமியர்கள்!

ஆனால் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பள்ளிவாசல்களிலும், ஈத்கா மைதானங்களிலும் சிறப்பு தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால் இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில் எளிமையான முறையில் ரம்ஜானை கொண்டாடினார். அதேபோல், இந்த வருடமும் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால், விதிகளை கடைப்பிடித்து வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்தி எளிமையான முறையில் கொண்டாட மாவட்ட அரசு காஜி கிபாயத்துல்லா அறிவுறுத்தியிருந்தார்.

அதன்படி, நேற்று ரம்ஜான் எனும் ஈகை திருநாளை இஸ்லாமியர்கள் எளிமையான முறையில் வீடுகளிலேயே கொண்டாடினர். மேலும், நேற்று காலை புதுஆடைகள் உடுத்தி, சிறப்பு தொழுகையிலும் ஈடுபட்டனர். இதேபோல் கோபி, அந்தியூர், பெருந்துறை உள்பட மாவட்டம் முழுவதும் இஸ்லாமியர்கள் எளிமையான முறையில் ரம்ஜான் பண்டிகையை வீடுகளில் கொண்டாடினர்.