“பெண் பூப்பெய்தி விட்டால் திருமணம் செய்ய வயது ஒரு தடையில்லை” – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

“பெண் பூப்பெய்தி விட்டால் திருமணம் செய்ய வயது ஒரு தடையில்லை” – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இஸ்லாமிய தனிநபர் சட்டத்தின்படி பூப்பெய்திய ஒரு இஸ்லாமிய பெண்ணைத் திருமணம் செய்ய எந்தத் தடையும் இல்லை என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பஞ்சாப்பைச் சேர்ந்த தம்பதி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

“பெண் பூப்பெய்தி விட்டால் திருமணம் செய்ய வயது ஒரு தடையில்லை” – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தம்பதி தங்கள் மனுவில், “எனக்கு 36 வயது. நான் திருமணம் செய்துகொண்ட பெண்ணுக்கு 17 வயது. நாங்கள் இருவரும் இஸ்லாமிய சடங்கு முறைப்படி கடந்த ஜனவரி 21ஆம் தேதி திருமணம் செய்துகொண்டோம். இதனை விரும்பாத மனைவியின் உறவினர்கள் வயதைக் காரணம் காட்டி எங்களைப் பிரிக்க நினைக்கின்றனர். ஆகவே எங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

“பெண் பூப்பெய்தி விட்டால் திருமணம் செய்ய வயது ஒரு தடையில்லை” – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அல்கா ஷெரின், “இஸ்லாமிய தனிநபர் சட்டப்பிரிவு 195இன் கீழ், பெண் ஒருவர் வயதுக்கு வந்துவிட்டால், அவர் விரும்பும் நபரைத் திருமணம் செய்து கொள்ளும் உரிமை உள்ளது. அதேசமயம் வயதுக்கு வந்த பெண்ணின் சம்மதம் இல்லாமல் நடைபெறும் திருமணம் சட்டப்படி செல்லாது என்பதையும் கருத்தில்கொள்ள வேண்டும்.

“பெண் பூப்பெய்தி விட்டால் திருமணம் செய்ய வயது ஒரு தடையில்லை” – உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இத்திருமணம் பெண்ணின் ஒப்புதலுடன் நடந்திருப்பதால் குடும்பத்தாரோ உறவினரோ தலையிட எந்த உரிமையும் இல்லை. அப்பெண்ணின் உறவினர்களின் வற்புறுத்தல்களாலும் மிரட்டல்களாலும் அரசியலமைப்பு வழங்கும் அடிப்படை உரிமையைப் பறிக்க முடியாது. ஆகவே தம்பதிக்கு காவல் துறையினர் உரிய பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்” என்று கூறி தீர்ப்பு வழங்கினார். குறிப்பாக, 15 வயதில் ஒரு பெண் பூப்பெய்தியதாகக் கருதப்படுவார் என்றும் தீர்ப்பில் தெரிவித்தார்.