முஸ்லிம் கைவினைஞர்கள் முதலில் இந்துக்களாக இருந்தனர்… மரியாதை கிடைக்காததால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.. பா.ஜ.க. எம்.பி

முஸ்லிம் கைவினைஞர்கள் முதலில் இந்துக்களாக இருந்தனர்… மரியாதை கிடைக்காததால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.. பா.ஜ.க. எம்.பி

உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் கைவினைஞர்கள் முதலில் இந்துக்களாக இருந்தனர், ஆனால் இந்து மதத்தில் உரிய மரியாதை கிடைக்காததால் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர் என்று பா.ஜ.க. எம்.பி. ராம் சந்திர ஜாங்க்ரா தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் முசாபர்நகர் பகுதியில் அண்மையில் நடந்த விஸ்வகர்மா சமூகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி. ராம் சந்திர ஜாங்க்ரா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: இப்பகுதியை சேர்ந்த முஸ்லிம் கைவினைஞர்கள் இந்துக்களாக இருந்தனர். இந்து கைவினைஞர்கள் மட்டுமல்ல, முஸ்லிம் சமூகத்தின் கைவினைஞர்களும் விஸ்வகர்மா சமூகத்தை சேர்ந்தவர்கள். பாபர் தன்னுடன் கைவினைஞர்களை அழைத்து வரவில்லை.

முஸ்லிம் கைவினைஞர்கள் முதலில் இந்துக்களாக இருந்தனர்… மரியாதை கிடைக்காததால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.. பா.ஜ.க. எம்.பி
ராம் சந்திர ஜாங்க்ரா

புல் கூட வளர முடியாத ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் கைவினைஞர்கள் இருக்க முடியாது. அந்த நிலம் மணல் குன்றுகளால் நிரம்பியுள்ளது. அங்கு கல் மலைகள் இல்லை. அந்த நிலத்தில் எண்ணெய்யை தவிர எந்த கனிமமும் வெளியே வராது. எனவே இங்குள்ள முஸ்லிம் சகோதரர்கள் கடவுள் விஷ்வகர்மாவின் வழித்தோன்றல்கள். அவர்கள் (முஸ்லிம் கைவினைஞர்கள்) மதமாற்றம் செய்ய சில காரணங்கள் இருந்திருக்க வேண்டும். நான் வரலாறு படித்தேன். பொது இடத்தில் இருந்து சொல்ல முடியாத பல விஷயங்கள் உள்ளன.

முஸ்லிம் கைவினைஞர்கள் முதலில் இந்துக்களாக இருந்தனர்… மரியாதை கிடைக்காததால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.. பா.ஜ.க. எம்.பி
அம்பேத்கர்

ஆனால் இங்கு உழைப்புக்கு மரியாதை கிடைக்காது. கடின உழைப்புக்கு மரியாதை கிடைக்காது, முயற்சிக்கு மரியாதை கிடைக்காது கிடைக்கவில்லை என்றால், அதன் எதிர்வினையாக மக்கள் மதத்தை விட்டுவிடுவார்கள். இது இஸ்லாமிய கைவினைஞர்களால் மட்டுமல்ல, பாபா சாஹேப் அம்பேத்கரிடமும் செய்யப்பட்டது. நான் இந்துவாக பிறந்தேன் ஆனால் நான் இந்துவாக சாக மாட்டேன் என்று அவர் சொல்லியிருந்தார். ஏனென்றால் கல்வி கற்ற பிறகும் அவருக்கு சமூகத்தில் மரியாதை கிடைக்கவில்லை. முஸ்லிம் கைவினைஞர்களுக்கு அவர்களின் மதமாற்றத்துக்கு வழிவகுத்தது இதுதான். எதிர்வரும் உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் அனைத்து கைவினைஞர்களும் ஒன்றிணைந்து பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.