ஸ்டாலின் வாக்குறுதி தேன் போல் இனிக்கிறது : ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்!

 

ஸ்டாலின் வாக்குறுதி தேன் போல் இனிக்கிறது : ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்!

திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட்டுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.

ஸ்டாலின் வாக்குறுதி தேன் போல் இனிக்கிறது : ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. 159 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், வரும் 7 ஆம் தேதி தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இந்த தருணத்திற்காக கோடான கோடி திமுகவினர் காத்து கிடக்கின்றனர். தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்கவுள்ள பதிவியேற்கவுள்ள நிலையில் பிரதமர் மோடி, ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.

இந்த சூழலில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், ” சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!” என்று பதிவிட்டார். இதற்கு நன்றி தெரிவித்த மு.க. ஸ்டாலின், ” இசைப்புயல் – ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும்” என்று பதிலளித்தார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினின் ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள ஏ .ஆர்.ரஹ்மான், “கோவிட் பெருந்தொற்றால் அல்லல்படும் தமிழர்களுக்கு இது, தேன் போல இனித்திடும் வாக்குறுதி. இந்த வாக்குறுதி பலித்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!” என்று பதிவிட்டுள்ளார்.