“முருகனின் வேல் திமுகவை விரட்டியடிக்கும்” : எல்.முருகன்

 

“முருகனின் வேல் திமுகவை விரட்டியடிக்கும்” : எல்.முருகன்

வேல் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

“முருகனின் வேல் திமுகவை விரட்டியடிக்கும்” : எல்.முருகன்

இந்நிலையில் ராசிபுரத்தில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகம் முழுவதும் பிப்ரவரி மாதத்தில் பாஜக மாநாடு நடைபெறும். வேல் தூக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஸ்டாலின் தள்ளப்பட்டுள்ளார். ஸ்டாலினையே வேல் தூக்க வைத்தது தான் பாஜகவின் வேல் யாத்திரைக்கு கிடைத்த வெற்றி.

“முருகனின் வேல் திமுகவை விரட்டியடிக்கும்” : எல்.முருகன்

ஓட்டுக்காகத்தான் ஸ்டாலின் இரட்டை நிலைப்பாடு காட்டுகிறார், என்னதான் இரட்டை வேடம் பேட்டாலும் மக்கள் நம்ப மாட்டார்கள்.ஓட்டுக்காக இரட்டை நிலைப்பாடு எடுப்பது ஸ்டாலின் கைவிட வேண்டும். முருகனின் வேலை ஸ்டாலின் ஏந்தியுள்ளார்; மிக விரைவில் முருகனின் வேல் திமுகவை விரட்டியடிக்கும். வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவினர் அதிகப்படியாக சட்டமன்றம் செல்வார்கள்” என்றார்

“முருகனின் வேல் திமுகவை விரட்டியடிக்கும்” : எல்.முருகன்

தொடர்ந்து பேசிய அவர், “தேர்தலுக்கு முன்பே திமுக கூட்டணி எப்போது வேண்டுமானாலும் உடைய வாய்ப்புள்ளது. ராகுல் காந்தியால் ஒரு திருக்குறளை சொல்ல முடியுமா?; காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்திலாவது தனித்து போட்டியிட முடியுமா?” என்று கேள்வி எழுப்பினார்.