முதலமைச்சர் பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்திப்பு

 

முதலமைச்சர் பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்திப்பு

சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

பாஜக-அதிமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை, கூட்டணி தொடரும் என முதல்வர் பழனிசாமியும் பாஜக தலைவர் எல்.முருகனும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தேர்தல் நேரத்தில் திமுகவுடன் கூட கூட்டணி அமைக்கலாம் என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியது.

முதலமைச்சர் பழனிசாமியுடன் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் சந்திப்பு

இதனிடையே அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை சந்திப்பதற்காக பாஜக மாநில தலைவர் முருகன் வருகை புரிந்துள்ளார். அவருடன் கட்சியின் பொதுச் செயலாளர் கே. டி.ராகவனுடன் உடனிருந்தார். தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.