துஷ்ட சக்திகளிடமிருந்து விடுபட முருகன் காயத்ரி மந்திரம்!

 

துஷ்ட சக்திகளிடமிருந்து விடுபட முருகன் காயத்ரி மந்திரம்!

அன்புக்கும் அருளுக்கும் பஞ்சம்வைக்காத முருகப் பெருமானை ‘முருகா’ என்று ஒருமுறை சொல்கிற பொழுது, முருகனோடு சேர்ந்து மும்மூர்த்திகளும் அருளும் முழுமையாக கிடைக்கும். ‘மு’ என்றால் ‘முகுந்தன்’ என்று அழைக்கப்படும் மகாவிஷ்ணுவைக் குறிக்கும். ‘ரு’ என்றால் ‘ருத்ரன்’ என்றழைக்கப்படும் சிவப்பெருமானைக் குறிக்கும். ‘க’ என்றால் கமலத்தில் அமர்ந்திருக்கும் கமலனான பிரம்மதேவனைக் குறிக்கும்.

துஷ்ட சக்திகளிடமிருந்து விடுபட முருகன் காயத்ரி மந்திரம்!

மும்மூர்த்திகளுக்கும் உள்ள முதல் எழுத்துக்களை இணைத்தால் ‘முருக’ என்று வருவதால், முருகனைக் கும்பிட்டால் மும்மூர்த்திகளின் அருளும் முருகப்பெருமானின் மூலமாக நமக்கு வந்து சேரும்.
முருகப் பெருமானுக்கு முன்று விரதங்கள் மிகவும் உகந்தவையாகும். அவை, வார விரதம், நட்சத்திர விரதம் மற்றும் திதி விரதம் ஆகும். வார விரதம் என்பது செவ்வாய் கிழமைகளிலும், நட்சத்திர விரதம் கார்த்திகை நட்சத்திரத்திலும், திதி விரதம் என்பது சஷ்டி திதியில் அனுஷ்டிப்பதாகும். செவ்வாய் கிழமைகளில் முருகப்பெருமானை வழிபாடு செய்வது மிகவும் உகந்தது, சக்தி வாய்ந்தது. கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் இவ்விரதம் மேற்கொண்டு முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும். செவ்வாய்க்கிழமை காலையில் நீராடி முடித்து, அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்கு சென்று வழிபடுங்கள்.

முருகனை வழிபடும் நாளில் முருகனுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரத்தை துதிப்பதின் மூலம் முருகனின் அருள் முழுமையாக கிட்டும்.

துஷ்ட சக்திகளிடமிருந்து விடுபட முருகன் காயத்ரி மந்திரம்!

முருகன் காயத்ரி மந்திரம்

ஓம் தத் புருசாய வித்மஹே மகேஷ்வர புத்ராய தீமஹிதந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்.

அர்த்தம்: தேவர்களுக்கெல்லாம் சேனாதிபதியாக விளங்கும் மகா சேனாதிபதியாகிய முருகப்பெருமானே உங்களை வணங்குகிறேன். அடியேனை ஆட்கொண்டு என்னையும் வழி நடத்த உங்களை வேண்டுகிறேன்.

இம்மந்திரத்தை முருகனுக்கு உகந்த தினங்களில், முருகன் கோயில்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் முருகன் படத்தின் முன்போ நெய் விளக்கேற்றி, செந்நிற மலர்களால் முருகனை அர்ச்சித்து 108 அல்லது 1008 தடவை சொல்லி முருகனை வழிபட்டு வந்தால் துஷ்ட சக்திகளின் பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம். 108 முறை என தொடர்ந்து ஒரு மண்டலம் 48 நாட்கள் பாராயணம் செய்வதன் பலனாக முருகப்பெருமானின் அருள் பரி பூரணமாக கிடைக்கும். முருக போற்றி! கந்தா போற்றி! கடம்பா போற்றி!

துஷ்ட சக்திகளிடமிருந்து விடுபட முருகன் காயத்ரி மந்திரம்!

-வித்யா ராஜா