கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் படுகொலை- மனைவி உள்பட மூவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

 

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் படுகொலை- மனைவி உள்பட மூவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

தேனி

தேனியில் கள்ளக்காதல் விவகாரத்தில் கூலி தொழிலாளி கொலைசெய்யப்பட்ட வழக்கில் மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் உள்ளிட்ட 3 பேர் குண்டர சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகேயுள்ள மேலப்பட்டியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முத்துக்காளை (42). இவருக்கு கலையரசி (29) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் குடும்ப தகராறு காரணமாக கடந்த அக்டோபர் மாதம் கலையரசி குழந்தைகளை அழைத்துக்கொண்ட தர்மபுரியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். இதனை தொடர்ந்து நவம்பர் 2ஆம் மனைவியை பார்ப்பதாக கூறி சென்ற முத்துக்காளை மாயமானார். இதுகுறித்து அவரது உறவினர்கள் புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில், சீப்பாலக்கோட்டை பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் முத்துக்காளை சடலமாக மீட்கப்பட்டார்.

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் படுகொலை- மனைவி உள்பட மூவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு

இதுகுறித்து, முத்துக்காளை மனைவி கலையரசியை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர். அப்போது, அவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த சேதுபதி என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும், இதனை கண்டித்ததால் கணவர் முத்துக்காளையை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்து. இதனையொட்டி, கடந்த 2ஆம் தேதி முத்துக்காளையை காமாட்சிபுரம் அருகேயுள்ள தோட்டத்திற்கு வரழைத்து கள்ளக்காதலன் சேதுபதி, அவரது நண்பர் கணேஷ் ஆகியோருடன் சேர்ந்து கொலை செய்து, சீப்பாலக்கோட்டையில் கிணற்றில் வீசியது தெரியவந்தது.

இதனை அடுத்து, போலீசார் 3 பேரையும் கைதுசெய்து, நீதிமன்ற காவலில் அடைத்தனர். இந்த நிலையில், அவர்கள் மூவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட எஸ்.பி. செய்த பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார். இதனையடுத்து, நிலக்கோட்டை சிறையில் இருந்த கலையரசி, மதுரை சிறையில் இருந்த அவரது கள்ளக்காதலன் சேதுபதி மற்றும் கணேஷ் ஆகியோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.