Home இந்தியா பாசத்தை பங்கிட்டதால் கொலையா?

பாசத்தை பங்கிட்டதால் கொலையா?

பாசத்தை பங்கிட்டதால் கொலையா?

   அன்பு பாசத்தை பங்கிட வந்த குழந்தையை ஏற்க முடியாத, பால்மனம் மாறாத 5வயது சிறுமி கொலையாளியாக மாற்றியிருக்கிறாள் ஆந்திர மாநிலத்தில். இந்த செய்திதான் கொரோனா, நீட் தற்கொலைகளையும் தாண்டி கடந்த நான்கு நாட்களாக சமூக வலைத்தளங்களிலும், செய்தி சேனல்களிலும் பார்ப்பவர்களின் கண்களிலும் மனதிலும் ஒருவித படபடப்பும், பயமும் கலந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதேமாதிரியான சம்பவம் கடந்த 2015ஆம் ஆண்டு கோயமுத்தூரில் நடந்துள்ளது. மேலும், இதைப்போன்ற சம்பவங்கள் அங்கொன்றும் இங்கொன்றும் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. இதுபோன்ற செய்திகளை நாம சாதணமாக கடந்து போக முடியாது. இதில், கொலை செய்த சிறுமியின் மனநிலை எந்தளவு பாதிப்படைந்துள்ளது என்பதையே காட்டுகிறது. சூர்யா, ஜோதிகா நடித்த உயிரிலே கலந்தது என்ற படத்தில் தம்பி சூர்யாவின் மீது அதீத அன்பு வைத்திருக்கும் பெற்றோர்களால், அண்ணன் தனக்கு அன்பு பரிபோய்விட்டதாக கருதி சூர்யாவை கொலை செய்வார். அதன்பின்னர், அண்ணன் ரகுவரன் குற்றவுணர்ச்சியால் மனநோயாளியாக மாறிவிடுவார். இதுபோன்ற சம்பவங்கள் டிவியிலோ, படத்திலோ பார்க்கும்போது ஐயோ இதுமாதிரியெல்லாம் நிஜத்தில் நடக்குமா? என்றுதான் கடந்து போய் விடுகிறோம். ஆந்திர மாநிலத்தில் நடந்த சம்பவம் கொலையே அல்ல.. பெரிய குழந்தையின் மீது இழைக்கப்பட்ட அநீதியாகும். தனக்கு மட்டுமே கிடைத்த அன்பை புதுவரவான இரண்டாவது குழந்தை பங்கிட்டு கொள்வதை ஏற்க முடியாத மனநிலையில் கடந்த பத்து மாதங்களாக இருந்துள்ளது அந்த குழந்தை. தன்னுடைய அப்பாவும் அம்மாவும் எப்பவும் தன்னுடைய இரண்டாவது குழந்தையை கொஞ்சுவதையும், இதனால் தனக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் குறைந்துவிட்டதாகவும் எண்ணி 11மாத குழந்தையை தண்ணீர் டேங்கில் போட்டு கொல்வது என்பது என்னவிதமான கொடூரமான மனநிலை. இதேபோன்றதொரு சம்பவம் கோயமுத்தூரிலும் நடந்துள்ளது பிறந்து 24நாட்களே ஆன குழந்தையை பொம்மை என நினைத்து தண்ணீரில் குளித்து விளையாடலாம் என சொல்லி 31/2வயது குழந்தை தன்னுடைய தங்கையை கொலை செய்தாள். இதை கொலை என்றே சொல்ல முடியாது. இதற்கெல்லாம் காரணம் குழந்தைகளே இல்லை. பெற்றோர்கள் தான் முழுமுதற்காரணம். நாம என்ன பண்ணிக்கிட்டிருக்கோம் நம்ம குழந்தைகளை சரியாதான் வளர்க்கிறோமா? அனைவரும் மீதும் அன்புப்செலுத்துமாதிரிதான் சொல்லிக்கொடுக்குறோமா? குழந்தைகள் கேட்டவுடன் உடனே ஒரு பொருளை வாங்கி கொடுப்பதால்தான் அன்பு இருக்கும் என நினைக்காமல், அவர்களிடம் உட்கார்ந்து கொஞ்சம் நேரம் விளையாடி, பேசுவது பெற்றோர்களின் கடமையாகும். அந்தக்காலத்தில் குழந்தையை கவனித்து கொள்வதற்கு தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா சித்தி, அத்தை என பெரிய குடும்பமாக குழந்தைகளுக்குத் தேவையான நல்லது கெட்டது கற்று கொடுத்தார்கள். இன்று,தனிக்குடும்பமாக மாற ஆரம்பித்த காலத்திலிருந்தே வீடுகளில் குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது சொல்லி கொடுப்பதற்கு யாருமில்லை. இன்றைய நிலையில் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவது இல்லை. எந்நேரமும் கையில் தவழும் அலைபேசியோடு பொழுதைக் கழிக்கிறார்கள்.      திரையரங்கமும், தொலைக்காட்சியும் அலைபேசியில் அடங்கி விட்டது. ஓடி ஆடி விளையாட வேண்டிய வயதில் அலைபேசியோடு விளையாடுவதால் அவர்களின் உடலும், உள்ளமும் பாதிக்கப்படுகிறது. குழந்தைகளின் அழுகையை நிறுத்த பொம்மைகளை கொடுத்த காலம் போய், போனை கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். போதக்குறைக்கு இந்த கொரோனாவால் ஸ்கூலுக்கு போகும் குழந்தைகளுக்கும் ஆன்லைன் க்ளாஸ் நடக்கிறது. குழந்தைங்களிடம் அன்றைய காலத்தில் வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் இன்றோ ஆளுக்கொரு போனோடு பேசிக்கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள். அதனால் குடும்ப உறவுகளுக்கும் விரிசல்கள் உண்டாகிறது. தற்போதைய காலகட்டத்தில் பொருளாதார நெருக்கடியால்  பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியமும் கட்டாயமும் உள்ளது. அதனால், பெரும்பாலும் குழந்தைகளை வேலைக்காரர்களின் பொறுப்பிலோ, மழலையர் விடுதிகளின் பொறுப்பிலோ விட்டு விடுகின்றனர். அந்த குழந்தை பெற்றோர்களின் அன்புக்காக ஏங்குகிறது. கிடைக்கும் கொஞ்சநேர அன்பும் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று ஏங்குகிற குழந்தைகளே இங்கு அதிகம். பொதுவாகவே கண்மூடித்தனமாக முதல் குழந்தைகளுக்கு அதீத அன்பை செலுத்தும் பெற்றோர்களையே பரவலாக பார்க்க முடியும். என் சாமி, என்னை தாயாக்குனவள் என அம்மா, அப்பா பாரபட்சமின்றி அன்பை குழந்தையின் அடிமனதில் விதைத்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு ஒரு நாள் திடீரென்று உனக்கு தங்கச்சி/தம்பி பாப்பா பொறக்க போறான்னு சொன்னால், அந்த குழந்தையின் மனதில் விஷத்தை கலப்பது போன்றதாகும். ஒருவரின் அன்பானது மற்றவருக்கு பகிர்ந்தளிப்பதை பெரியவர்களாகிய நாமே தாங்கி கொள்ள முடியாத சூழலில் பிஞ்சி மனம் என்ன செய்யும். மாமியாருக்கும் மருமகளுக்குமான சண்டைகளே பொதுவாக இந்த அன்பு பரிமாற்றத்தில்தான் ஆரம்பிக்கும். இதையெல்லாம் உணர்ந்த நம் முன்னோர்கள் கூட்டு குடும்பம் பற்றியும், அண்ணன் தங்கை பாசத்தை பற்றியும் கதைகளாக சொல்லி வளர்த்தனர். அப்போதெல்லாம், கிராமப்புறங்களில் ஒரு வீட்டில் எட்டு குழந்தைகள் பத்து குழந்தைகள்னு எந்தவித பாரபட்சமும் இல்லாமல் வளர்ந்தனர். இப்போ, இரண்டாவதாக குழந்தை பெற்றுக்கொள்ளவுள்ள பெற்றோர்கள் இந்த உறவுமுறை சிக்கலில் இருந்து விடுபடுவதற்காக அம்மா கர்ப்பமாக இருக்கும் போதே, புது குழந்தையின் வரவு பற்றி முதல் குழந்தையிடம் பேசத் துவங்கிவிடுகிறார்கள். ‘குழந்தையை அம்மாவும், அப்பாவும் மட்டும் எப்போதும் பாத்துக்க முடியாது. நீயும் பாத்துக்கணும். நாம மூணு பேரும் சேர்ந்து தம்பி/தங்கச்சி பாப்பாவை பார்த்துக்கலாம்’ என்று சொல்லி குழந்தை கருவுற்ற காலத்திலிருந்து முதல் குழந்தையை பட்டை திட்டுகிறார்கள். மேலும், புதுக்குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டியதில் தன் பொறுப்பும் உள்ளது என்பதையும் நம்பும் முதல்குழந்தை. 
representative image

முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் குறைந்த பட்சம் வயது இடைவெளி 3 வருடங்களாக இருப்பதே சிறந்தது என இந்திய அரசு தெரிவித்துள்ளது. ஏனெனில், குறித்த 3 வருட காலத்தில் தாயின் உடல்நிலை சிறந்த நிலைக்கு திரும்புவதாகவும் அவர் நல்ல நிலையில் அடுத்த குழந்தையை பெற்றடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சிறந்த முறையிலான இடைவெளி காணப்படும் குழந்தைகளுக்கு இடையில் நல்ல அன்பு செலுத்தக்கூடியவர்களாகவும், அவர்களுக்கு இடையில் சண்டை சச்சரவுகள் குறைந்த அளவில் காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்வதற்கு முன் தாய் செய்ய வேண்டிய கடமைகள் மற்றும் முதல் குழந்தைக்கும் தாய்க்குமான புரிதல் மிக மிக அவசியமானதாகும். முதல் குழந்தை ஸ்கூல் செல்ல தொடங்கி விட்டால் ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளை பார்த்து கொள்ளும் வேலையும் குறையும். ஸ்கூல் போகும் முதல் குழந்தைகளின் ஸ்கூல் ஃப்ரன்ஸுக்கு, தம்பியோ, தங்கையோ இருப்பதினால் அது குறித்த பக்குவம் முதல் குழந்தைக்கு கிடைக்க வாய்ப்புகள் அதிகம். அதற்காகவே முதல் குழந்தை பெற்றெடுப்பதற்கும் இரண்டாவது குழந்தை பெற்றெடுப்பதற்கும் போதிய கால இடைவெளி அவசியம். இரண்டாவது குழந்தை கர்ப்பமாக இருக்கும் போது முதல் குழந்தையானது ஏங்க தொடங்கும். காரணம், எங்கே தன் அம்மா, அப்பாவின் பாசம் தனக்கு கிடைக்காமல் போய்விடுமோ என பயப்படும். இந்த உணர்வில் இருந்து முதல் குழந்தையை வெளி கொண்டு வர அவர்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் என்றும் நீ எனக்கு முக்கியமே என முதல் குழந்தையை உணர வைக்க வேண்டும். முதல் குழந்தைக்கு பிறக்க இருக்கும் இரண்டாவது குழந்தை பற்றிய ஆர்வத்தை அதிகரிக்க செய்வது பெற்றோர்களின் கடமை. இது உன் குட்டி தங்கை, இது உன் குட்டி தம்பி என அடிக்கடி முதல் குழந்தையிடம் சொல்லி கொண்டே இருக்க வேண்டும். முதல் குழந்தைக்கு இரண்டாவது குழந்தைக்கு அண்ணனாவதும், அக்கா ஆவதும் எவ்வளவு பெரிய சந்தோஷம் என்ற புரிதலை அவர்கள் மனதில் உருவாக்க வேண்டும்.குழந்தை என்ற பாசத்தின் போர்வையில் குழந்தைகளின் ஆளுமையை அழிப்பது பெற்றோர்கள் தான். நல்ல குழந்தைகளை உருவாக்குவது என்ற குறிக்கோளை மையமாகக் கொண்டு குழந்தைகளை வளர்த்தால் வருங்கால மனங்கள் வளமானதாக இருக்கும். குழந்தை என்ற பாசத்தின் போர்வையில் குழந்தைகளின் ஆளுமையை அழிப்பது பெற்றோர்கள்தான். நல்ல குழந்தைகளை உருவாக்குவது என்ற குறிக்கோளை மையமாகக் கொண்டு குழந்தைகளை வளர்த்தால் வருங்கால மனங்கள் வளமானதாக இருக்கும்.

 தத்தெடுப்பது

வித்யா ராஜா

Most Popular

யோகி மாநிலத்தில் கார் எந்த நேரத்திலும் கவிழும்…. ஹத்ராஸ் சம்பவம் குறித்து சூசகமாக சொன்ன பா.ஜ.க. மூத்த தலைவர்

ஹத்ராஸ் சம்பவத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பல்வேறு தரப்பினரும் குரல் எழுப்பி வரும் வேளையில், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பதை, யோகி மாநிலத்தில் கார் எந்த நேரத்திலும்...

பாபர் மசூதி இடிப்பு வழக்கு.. நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் சிவ சேனா…. மேல்முறையீடு செய்ய வலியுறுத்தும் காங்கிரஸ்..

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக சிவ சேனா தெரிவித்துள்ளது. அதேசமயம் சிவ சேனாவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சி.பி.ஐ. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு...

கர்நாடகா இடைத்தேர்தல்.. அலட்டிக்கொள்ளாத பா.ஜ.க…. நெருக்கடியில் காங்கிரஸ் மற்றும் குமாரசாமி கட்சி

கர்நாடகாவில் நவம்வர் 3ம் தேதியன்று 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில் காங்கிரசும், மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியும்...

யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது… திக்விஜய சிங் குற்றச்சாட்டு

உத்தர பிரதேச அரசு ஏழைகள் மற்றும் தலித்துகளுக்கு எதிரானது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய சிங் குற்றம்சாட்டினார். உத்தர பிரதேசத்தில் முதல்வர்...
Do NOT follow this link or you will be banned from the site!