மாட்டை அவிழ்த்து விடுவதில் தகராறு: ஜல்லிக்கட்டு போட்டியில் ‘கத்திக்குத்து’!

மாட்டை அவிழ்த்து விடுவதில் தகராறு: ஜல்லிக்கட்டு போட்டியில் ‘கத்திக்குத்து’!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் போது கத்திக்குத்து சம்பவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாட்டை அவிழ்த்து விடுவதில் தகராறு: ஜல்லிக்கட்டு போட்டியில் ‘கத்திக்குத்து’!

மதுரை மாவட்டத்தில் ஆண்டு தோறும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகையின் முதல் நாளான இன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாடிவாசல் வழியாக அனுப்பப்படும் காளைகளை, மாடு பிடி வீரர்கள் அடக்கி பரிசு பொருட்களை தட்டிச் செல்கின்றனர். ஒரு சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல், லாவகமாக தப்பிச் செல்வது பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைக்கிறது.

மாட்டை அவிழ்த்து விடுவதில் தகராறு: ஜல்லிக்கட்டு போட்டியில் ‘கத்திக்குத்து’!

இந்த நிலையில், அவனியாபுரம் போட்டியில் காளையை அவிழ்த்து விடுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. வரிசையில் நின்று கொண்டிருந்த போது அருண்குமார், தெய்வேந்திரனுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், கத்திக் குத்து நடந்ததாக தெரிகிறது. இதில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒருவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.