• February
    21
    Friday

Main Area

Main



முரசொலி பஞ்சமி நில விவகாரம்; ஸ்டாலின் ஆஜராக உத்தரவு!

MK stalin
MK stalin

முரசொலி பஞ்சமிநிலம் விவகாரம் தொடர்பாக ஜனவரி 7ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும், உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேசிய பட்டியல் இனத்தோர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி கட்டடம் பஞ்சமி நிலத்தை வளைத்துப் போட்டு திமுக தமக்கு சொந்தமாக்கியதாக சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டார். அது பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்க,  திமுக தலைவர் ஸ்டாலின் அந்த நிலத்தின் பட்டாவைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.  அதற்கு, ஸ்டாலின் ஏன் மூலப்பத்திரத்தை வெளியிடத் தயங்குகிறார் எனக் கருத்துக்கள் எழுந்தன. 

ஸ்டாலின்

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தை அபகரித்துக் கட்டப்பட்டுள்ளதா என்று விசாரணை செய்யும் படி பா.ஜ.க மாநிலச் செயலாளர் இரா.ஸ்ரீனிவாசன், எதேசிய பட்டியல் இனத்தோர் ஆணைய துணைத் தலைவரிடம் மனு அளித்தார். சீனிவாசன் அளித்த புகாரின் பேரில், தேசிய பட்டியலின ஆணையம் முரசொலி அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய ஆதாரங்களுடன் நேரில் வந்து விளக்கமளிக்குமாறு  நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி முரசொலி பஞ்சமிநிலம் விவகாரம் தொடர்பாக ஜனவரி 7ம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும், உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேசிய பட்டியல் இனத்தோர் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. 

2018 TopTamilNews. All rights reserved.